ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுது போக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், சில படங்கள் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையைக் குறிப்பிடும். சில படங்கள் ஐக்யூ சோதனையாகவும் இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு படத்தை நாம் எப்படி பார்க்கிறோம், எந்த கோணத்தில் பார்க்கிறோம். அப்படி பார்க்கும்போது நம் மூளை எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், ஒரு ஐக்யூ சோதனை படம். இதில் வரையப்பட்டுள்ள ஒட்டகத்தில் சவாரி செய்பவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். ஒட்டகச் சவாரி செய்பவரை அதிக நுண்ணறிவு உள்ளவர்களால்தான் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள். உங்கள் ஐக்யூ அளவை சோதனை செய்ய ஒட்டகச் சவாரி செய்யும் மனிதனைக் கண்டுபிடியுங்கள்.

இது ஒரு புத்திசாலித்தனமான ஓவியம், இது 1880களில் குழந்தைகளுக்காக வரையப்பட்டது. ஒரு ஒட்டகத்தின் ஓவியத்தில் ஒரு மனிதனின் முகத்தைக் காணலாம். இந்த IQ சோதனைக்கான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அதிக நுண்ணறிவு உள்ளவர்கள் ஒட்டகச் சவாரி செய்பவரின் முகத்தைப் பார்க்கலாம்.
சிறிது புதர்களால் சூழப்பட்ட இடத்தில் உயரமாக நிற்கும் கம்பீரமான ஒட்டகத்தின் உருவத்திற்குள் ஒரு சவாரி செய்பவரின் இரகசிய உருவப்படம் மறைக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் முகத்தை மறைத்து வைத்திருக்கும் ஒட்டகத்தின் ஓவியத்தில், உள்ள மனிதனின் முகத்தை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். இந்த ஒட்டகத்தின் ஓவியத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித முகத்தை கண்டுபிடிக்க முயலும் ஆயிரக்கணக்கான நெட்டிசன்களை தலை முடியை பிச்சிக்கொள்ள செய்துள்ளது இந்த படம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உன்னிப்பாகப் பார்த்து, ஒட்டகத்தின் ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனின் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். மனிதனின் முகத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஒரு யோசனை சொல்கிறோம். நீங்கள் இந்த படத்தை தலைகீழாக புரட்டினால் கண்டுபிடிக்கலாம். ஒட்டகச் சவாரி செய்பவரின் முகத்துக்கு சொந்தக்காரர் ஒட்டகத்தின் காலுக்கு அருகில் கீழ் வலது மூலையில் இருப்பதைப் பார்க்கலாம்.

ஒட்டகப் படத்தில் மறைந்திருக்கும் மனிதனின் முகத்தை 20 வினாடிகளில் கண்டுபிடித்தால் அது உங்களது அசாத்திய புத்திசாலித்தனத்தின் அடையாம். கடினமான புதிர்களுடன் உங்கள் மூளைக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”