Optical illusion game: உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் தொடர்பாக பல வகையான ஆப்டிகல் இல்யூஷன்கள் உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது மனதை வளைக்கும், ஆழமாக கவர்ந்திழுக்கும், ஒரு பொருளின் அல்லது வரைபடத்தின் வடிவத்தை மாற்றும் படம் அல்லது விஷயங்களை உணரும் மூளையின் வழியை சவால் செய்யும்.
இந்த IQ டெஸ்ட் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அதிக நுண்ணறிவு கொண்ட ஜீனியஸ்கள் மட்டுமே 9 வினாடிகளில் படத்தில் உள்ள வேட்டைக்காரருக்கு முன்னால், மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடிக்க முடியும். விரைவாக நரியைக் கண்டுபிடித்தால் நீங்கதான் ஜீனியஸ்.
ஒரு சாதாரண மனித மூளை ஒரு காட்சியைப் பார்க்கும்போது அல்லது ஒரு பொருளைப் பார்க்கும்போது ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் படங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படும். எனவே, ஆப்டிகல் இல்யூஷன்கள் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஏனெனில், ஆப்டிகல் இல்யூஷன் படங்க்ள் நீங்கள் விஷயங்களை எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதில் சில வெளிச்சங்களை பாய்ச்சுகின்றன. அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான ஒரு படமாக IQ டெஸ்ட் ஆப்டிகல் இல்யூஷன் படமாக இந்த விண்டேஜ் படத்தைப் பார்க்கலாம். Pinterest தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில், ஒரு நரி வேட்டைக்காரனிடமிருந்து மறைந்துள்ளது. நரியை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்விக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.
நீங்கள் இந்த பழமையான அழகிய ஓவியத்தில் எப்படி தேடி பார்த்தாலும் நரியைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நீங்கள் கொஞ்சம் நரியைப் போல தந்திரமாக யோசித்து இந்த படத்தைப் பார்க்கும் கோணத்தை பக்கவாட்டில் மாற்றி பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் நரியை வெறும் 9 வினாடிகளில் அடையாளம் காண முடிந்தால், அது உங்கள் அசாதாரண புத்திசாலித்தனத்தின் அடையாளம். கடினமான புதிர்களுடன் உங்கள் மூளைக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும். எனவே, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்பொழுதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய சில கண்கவர் பார்வையை அளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.