ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமான புதிருக்கு அடிமையாகதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கும் இணையம் எங்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாக தேடிப்பார்த்து விடையளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து கண்ணுக்கும் மூளைக்கு வேலை தரக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பே, முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். இதில் எது நிஜமான தோற்றம் என்று பார்ப்பவர்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்.

இந்த ஆண்டின் சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படம், இதில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்க்க வைக்கிறது என்பதுதான்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்த ஆண்டி சுவாரசியமான அப்டிகல் இல்யூஷன் படம் என்றால் அது மிகையல்ல. இந்த படத்தைப் பார்ப்பவர்கள் நன்றாக சிரிக்கிறார்கள். ஏனெனில், இது ஒரு வெள்ளை நிற திருமண கவுனில் ஒரு பெண் மிகவும் வேடிக்கையாக உள்ளார்.
இந்த படம் முதலில் இங்கிலாந்து திருமண ஆடை பஜாரில் வெளியிடப்பட்டது. ஆனால் அது இப்போது ரெடிட் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது. இந்த படத்தில் முதல் பார்வையில், திருமண ஆடை எம்பிராய்டரி பொருட்களை சித்தரிக்கிறது. ஆனால், ரெடிட் பயனர் ஒருவர், இது ஒரு முதியவரின் முகத்தை ஒத்திருப்பதாகக் கூறினார்.
அப்படியா தெரிகிறது? நீங்கள் இன்னொரு முறை படத்தைப் பாருங்கள்.

சிலர் இரண்டாவது முறை பார்க்கும்போது ஒரு மனிதனின் முகம் போல் இருப்பதாக ஒப்புக்கொண்டாலும், மற்றவர்கள் இது ஒரு ஆடையில் ரோர்சாச் சோதனை போன்றது என்று கூறுகிறார்கல்.
Rorschach சோதனை என்பது மன நல பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வகை ப்ராஜெக்டிவ் சோதனை. இதில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் நிலையான சமச்சீர் வடிவில் ஒவ்வொன்றாக வழங்கப்படும். அவர்கள் பரிந்துரைக்கும் அல்லது ஒத்திருப்பதை விவரிக்கும்படி கேட்கப்படுவார்கள்.
இதில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இந்த திருமண கவுனில் என்ன தெரிகிறது நிஜமாகவே ஒரு இளம் மணப்பெண்ணா? அல்லது சிலர் கூறுவது போல, ஒரு முதியவரா? சிலர் கூறுவது போல ஒரு ஆணின் முகமா உங்களுக்கு என்ன தெரிகிறது?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”