ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரிந்து பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. இந்த படமும் அப்படித்தான். இந்த படத்தில் இருப்பது என்ன என்று கேட்டால் அனைவரும் அண்டங்காக்கை என்று சொல்வீர்கள் ஆனால், அதுதான் இல்லை. இது என்ன விலங்கு என்று சரியாக சொன்னால், கூர்மையான பார்வையுடைய 1% பேர்களின் வரிசையில் சேர்வீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்தான் முக்கிய காரணம். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு கட்டத்தில் உண்மையான தோற்றம் எது என்று குழப்பமடையச் செய்யும்.
இப்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் படத்தில் இருப்பது என்ன விலங்கு என்று நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு சரியான பதில் இருந்தாலும், சில பார்வையாளர்கள் தங்கள் பார்வையின் கோணத்தை முன்வைத்து விடையைக் கூறி வருகின்றனர்.

டிக்டாக்கில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருப்பது காக்கை என்றும் சிலரும் இல்லை என்று கூறி வருகின்றனர். காக்கை இல்லை என்றால் வேறு என்ன விலங்கு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருப்பது காக்கை அல்ல, முயல் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், பார்வையாளர்கள் இது காக்கையா அல்லது முயலா என்பதை விளக்கி விவாதித்து வருகின்றனர். இந்த படத்தில், ஒரு கண் இருக்கிறது. அது முயல் கண் போல தெரிகிறது. அதனால், மேலே இருப்பது முயல் காதுகளா? அல்லது காக்கையின் அலகுகளா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆனால், ஒரு பார்வையாளர் தான் முயலைப் பார்த்ததாகக் கூறுகிறர். ஆனால், சற்று உற்று கவனித்தால் காக்கை போலவே தெரிகிறது.
மற்றொரு பார்வையாளர், தனக்கு முயல்கள் தெரிந்தாலும் அவற்றின் காதுகள் முயலின் காதுகள் போல இல்லாததால் அது காக்கை போல தெரிகிறது என்று கூறுகிறார். ஆனால், இந்த படத்தை சற்று சாய்த்துப் பார்த்தால் முயல் தெளிவாகத் தெரியும். ஆனாலும், நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் பார்வையாளர்களும் இது காக்கையா? முயலா என்று விவாதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“