scorecardresearch

3டி மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஒட்டகம் தெரியும்; உங்களுக்கு தெரியுதா பாருங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தைப் பார்த்தால் 3டி மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஒட்டகம் தெரியும் என்பதுதான் சிறப்பு. உங்களுடைய மூளை 3டி மூளையா என்று தெரிந்துகொள்ள ஒட்டகம் தெரியுதா பாருங்கள்.

3டி மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஒட்டகம் தெரியும்; உங்களுக்கு தெரியுதா பாருங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தைப் பார்த்தால் 3டி மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஒட்டகம் தெரியும் என்பதுதான் சிறப்பு. உங்களுடைய மூளை 3டி மூளையா என்று தெரிந்துகொள்ள இந்த படத்தில் ஒட்டகம் தெரியுதா பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி நெட்டிசன்கள் ஏன் வெறித்தனமாக பார்த்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அதில் உள்ள சுவாரசியம்தான். எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்றுக்கொள்ளும்போது முதலில் அது மிகவும் எளிதாக இருக்கும். அதில் மறந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்கத் தேடும்போது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடத்தொடங்கினால், நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். சவாலை தீர்க்க முடியாமல் திகைத்து நிற்பீர்கள், இறுதியில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமானது. ஒரு கலைட்டாஸ்கோப்பில் பார்க்கும்போது தெரியும் வர்ண ஜாலங்களைப் போல, இந்த படத்தில் ஒரு வர்ணஜாலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு 3டி படம். இந்த வர்ணஜாலத்தில் ஒட்டகங்கள் மறைந்திருக்கிறது. இதில் உள்ள ஒட்டகம் 3டி மூளை உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்களுக்கு 3டி மூளையா என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அப்படியென்றால், இந்த படத்தில் உங்களுக்கு ஒட்டகம் தெரிகிறதா என்று பாருங்கள்.

நிஜமாகவே இந்த படம் ஒரு மேஜிக்கை நிகழ்த்துகிறது. டிக்டாக்கில் வெளியான இந்த படம் வண்ணங்களை சிதறவிட்ட ஒரு சுவரோவியம் போல இருக்கும். எளிதில் புரிபடாத ஒரு நவீன அரூப ஓவியம் போல இருக்கும். இந்த படம் 1990களில் ஆப்டிகள் இல்யூஷன் புத்தகங்களில் பலராலும் அறியப்பட்டதுதான்.

வர்ணஜாலம் போல தெரியும் இந்த படத்தில் உங்களுக்கு ஒட்டகம் தெரிந்தால் உங்களுக்கு 3டி மூளை இருக்கிறது என்று அர்த்தம். ஒட்டகம் தெரிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஒருவேளை உங்களுக்கு ஒட்டகம் தெரியவில்லை என்றால், இருப்பினும், நீங்கள் ஒட்டகத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இந்த படம் உள்ள திரையை முகத்திற்கு நெருக்கமாகப் பிடித்துக்கொண்டு அதை மெதுவாக நகர்த்துங்கள். இப்போது ஒட்டகம் தெரியும் பாருங்கள். ஏனென்றால், இதில் இல்யூஷன் என்பது ஒரு ஆட்டோஸ்டீரியோகிராம், இரு பரிமாண (2டி) படங்கள், மீண்டும் மீண்டும் வரும் வடிவங்களைக் கொண்ட முப்பரிமாண (3D) படத்தை மறைக்கும் என பார்வை மற்றும் கண் ஆரோக்கியம் பற்றி கூறுகிறது.

“நீங்கள் ஒரு ஆட்டோஸ்டீரியோகிராம் பார்க்கும்போது, ​​​​உங்கள் மூளை ஆரம்பத்தில் இரண்டு கண்களிலிருந்தும் 2டி வடிவங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறது” என்று இந்த தளம் விளக்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion only 3d brains can spot the camel in this image