Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் திகட்டாத விளையாட்டாக சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஒருமுறை விளையாடிப் பாருங்கள் பிறகு வெறித்தனமாக விளையாடுவீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் துப்பாக்கியுடன் இருக்கும் வேட்டைக்காரர்களுக்கு சிக்காமல் மறைந்திருக்கும் மானை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பெயரைக் கேட்டு என்னமோ ஏதோ என்று மிரண்டு விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைத் திறனை அடிப்படையாக வைத்தும் மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கேட்கப்படுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். காட்டில் இரண்டு வேட்டைக்காரர்கள் துப்பாகியுடன் வேட்டைக்கு செல்கிறார்கள். அவர்களைப் பார்த்த மான் அவர்கள் கண்ணில் படமாமல் மறைந்துகொள்கிறது. வேட்டைக்காரர்களின் கண்களுக்கு சிக்காத அந்த புத்திசாலி மானை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த மான் எங்கே மறைந்திருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வேட்டைக்காரர்களுக்கு சிக்காத மானை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான் .உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் மான் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் மான் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மான் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க பொரு குறிப்பு தருகிறோம். மரங்களுக்கு பின்னால் கவனமாகப் பாருங்கள். மானைக் பார்க்கலாம்.
இப்போது நீங்கள் மானை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மான் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.