Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கிக்க் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலை ஏற்று விளையாடதவர்களே இல்லை என்று கூறலாம். நீங்களும் ஒருமுறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.

ஆப்டிகல் இல்யூஷனுக்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த விண்டேஜ் படத்தில் வேட்டைக்காரருக்கு முன்னால் இருக்கும் நரியை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மனதை மயக்கும், ஆழமாக கவர்ந்திழுக்கும், ஒரு பொருளின் வடிவத்தை மாற்றிக் காட்டி ஏமாற்றும். படங்களில் உள்ள பொருட்கள், விலங்குகளை பார்த்து உணரும் மூளையின் திறனை சவால் செய்யும். பொதுவாக மனித மூளையால் ஒரு காட்சியில் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். எனவே, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் விஷயங்களை எப்படி பார்த்து உணர்கிறீர்கள் என்பதில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு விண்டேஜ் ஓவியம். இந்த படத்தில் ஒரு வேட்டைக்காரர் குதிரை மீது அமர்ந்திருக்கிறார். நாய்கள் சுற்றி வளைத்திருக்கின்றன. குதிரைக்கு பின்னால், ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தின் அருகே இன்னொரு வேட்டைககாரர் இருக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்தில் ஒரு நரி இருக்கிறது. அந்த நரி எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் நரியை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த விண்டேஜ் ஓவியத்தில் மறைந்திருக்கும் நரியை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் நரி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் நரி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை வேறு வேறு கோணங்களில் என எல்லாக் கோணங்களிலும் கவனமாகப் பாருங்கள். நீங்கள் நரி முகத்தில் விழிக்கலாம்.
இப்போது நீங்கள் நரியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். படத்தை வலதுபுறமாக திருப்பி வைத்துப் பாருங்கள். நரியைப் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“