Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம். என்ன பில்டப் ஓவரா இருக்குதுனு நினைக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள். மேற்சொன்னதெல்லாம் அனுபவமாகும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூழாங்கற்கள் இடையே மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் கிரேட் பாஸ். இது மிகவும் சவாலானது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது எப்படி என்றால் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல, இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு. அந்த மாதிரிதான் ஆப்டிகல் இல்யூஷன். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு சுவாரசியமான மாயாஜாலத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்றால், நெட்டிசன்கள் பரபரப்பாகி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் கூழாங்கற்கள் இடையே ஒரு ஆபத்தான பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கிரேட் பாஸ். ஏனென்றால், இது மிகவும் சவாலானது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூழாங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிரேட் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.