சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
இதுமட்டுமின்றி சில படங்கள் உங்களுக்கு அதில் முதல்பார்வையில் தெரியும் காட்சி ஆளுமைக் குறிப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர்.
இந்த படத்தில் உங்களுக்கு தெரிவது குதிரையா? தலையா? இசைக்கலைஞரா? என்று சொல்லுங்கள் உங்கள் ஆளுமையை செக் பண்ணுங்க…

குதிரை
இந்த புகைப்படத்தில் நீங்கள் குதிரையை முதலில் பார்த்தால், மக்கள் உங்களைப் பார்க்கும்போது முதலில் கவனிப்பது உங்கள் தீவிர கண் பார்வை தான். இது சிலருக்கு நீங்கள் எளிதில் அணுக முடியாதவர் மற்றும் தீவிரமானவர் என்பதை உணர்த்தலாம். உங்களுடன் பேச ஆரம்பித்தவுடன், நெருக்கமான நபர்களுடன் சிறந்த உறவைப் கொண்டிருப்பதை அறிந்துகொள்வார்கள்.நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைக் கண்டுபிடிக்க மக்களுக்கு நேரம் கொடுங்கள்
இசைக்கலைஞர்
நீங்கள் முதலில் கவனிப்பது இசையமைப்பாளர் என்றால், உங்கள் நகைச்சுவை உணர்வை மக்கள் முதலில் கவனிக்கிறார்கள் என்பது அர்த்தம். உங்களுடனான சிறிய உரையாடல்கள் மகிழ்ச்சி அளிப்பதையும், நீங்கள் சிறந்த பொழுதுபோக்காளராக இருப்பீர்கள் என்பதையும் புரிய வைக்கிறது. பெரும்பாலும், குறிப்பிட்ட சிலரை மட்டுமே நெருக்கமாக வைத்திருப்பீர்கள்.
தலை
நீங்கள் முதலில் பார்ப்பது தலை என்றால், மக்கள் உங்களை முதன்முதலில் சந்திக்கும் போது உங்களது வரவேற்கும் தன்மையைக் கவனிக்கிறார்கள். உங்கள் அன்பான கைகுலுக்கலும், முகத்தின் புன்னகையும் அனைவருக்கும் வீட்டில் இருப்பது போன்ற சூழலை உருவாக்கும். நீங்கள் பிறர் சொல்வதை நன்கு கேட்பவர் என்பதை புரிந்துகொண்டு, உங்களுடன் உரையாடி நண்பனாக மாற முயற்சிப்பார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil