scorecardresearch

முதலில் இந்த விலங்கு தெரிந்தால்… நீங்கதான் பிறவி தலைவருங்க

கிளி ஜோசியம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் இருக்கும் கிளி, வெளியே வந்து எடுத்து தரும், சீட்டில் உள்ள படத்தை வைத்து ஜோசியம் சொல்லப்படுகிறது. சமூக ஊடகங்களின் காலத்தில் கிளி ஜோசியத்தின் இடத்தை ஆப்டிகல் இல்யூஷன் பிடித்திருக்கிறது.

Optical Illusion image, Optical illusion photo, ஆப்டிகல் இல்யூஷன், பர்சனாலிட்டி டெஸ்ட், முதலில் இந்த விலங்கு தெரிந்தால், நீங்கதான் பிறவி தலைவருங்க, Optical Illusion, personality test, find your character, Lion, Cat, Wolf, Whale, Horse, Owl, Fox, Monkey, Elephant, Turtle, Bear, Giraffe, viral photo, viral

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயலைப் போல தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், ஆளுமையை குறிப்பிடுபவையாகவும் உள்ளன.

கிளி ஜோசியம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் இருக்கும் கிளி, வெளியே வந்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுகளில் ஒன்றை எடுத்து தரும். அந்த சீட்டில் உள்ள படத்தை வைத்து அந்த நபருக்கு ஜோசியம் சொல்வார்கள். சமூக ஊடகங்களின் காலத்தில் கிளி ஜோசியத்தின் இடத்தை ஆப்டிகல் இல்யூஷன் பிடித்திருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு ஒன்றாகவும் தெரியக்கூடியவை. அது மட்டுமல்லாமல், உங்களுக்கு முதல் பார்வையில் என்ன தெரிகிறது என்பதை வைத்து உங்கள் ஆளுமையையும் குண நலனையும் கூறிவிடலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் வரிசையில், இந்த படம் நிறைய நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆளுமையை வெளிப்படுத்தும், இந்த படத்தில் சிங்கம், பூனை, ஓநாய், திமிங்கலம், குதிரை, ஆந்தை, நரி, குரங்கு, யானை நிறைய விலங்குகள் இருக்கிறது. முதல் பார்வையில் இந்த விலங்கு மட்டும் தெரிந்தால் நீங்கள் பிறவி தலைவர் தெரிந்துகொள்ளுங்கள்.

மையர்ஸ் – பிரிக்ஸ் (Myers-Briggs) ஆளுமை சோதனையால் ஈர்க்கப்பட்ட Jackpotjoy உருவாக்கியது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம். நீங்கள் முதலில் எந்த விலங்கைக் பார்த்தீர்கள் என்பதைப் பொறுத்து ஒருவரின் உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாக கூறுகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை நன்றாகப் பாருங்கள், இந்த படத்தில், சிங்கம், பூனை, ஓநாய், திமிங்கலம், குதிரை, ஆந்தை, நரி, குரங்கு, யானை நிறைய விலங்குகள் இருக்கிறது. இதில், உங்களுக்கு முதல் பார்வையில் என்ன படம் தெரிகிறது என்பதை வைத்து உங்கள் ஆளுமை பற்றி கூறப்படுகிறது.

சிங்கம்

நீங்கள் முதலில் சிங்கத்தைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் ஒரு பிறவித் தலைவர், நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து அதிக மரியாதையைத் தருகிறது.

பூனை

நீங்கள் முதலில் பூனையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் மிகவும் உற்சாகத்துடனும் உறுதியுடனும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் சில சமயங்களில் மனதுக்குள் சிந்தனையுடனும் உங்கள் இடத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

ஓநாய்

நீங்கள் முதலில் ஓநாயைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் மர்மமானவர் என்று அர்த்தம். அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க மக்கள் போராடலாம். நீங்கள் உங்களைப் பற்றி அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறீர்கள். கடினமான நேரங்களைச் சந்திப்பதில் அல்லது சந்தேகங்களைச் சமாளிப்பதில் முனைப்புடன் செயல்படுகிறீர்கள்.

திமிங்கலம்

நீங்கள் முதலில் திமிங்கலத்தைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் வாழ்க்கையில் எதையோ சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு குழுவின் பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். பொதுவாக முடிவுகளை எடுக்கும்போது உங்கள் மனது சொல்கிறப்படி வழிநடத்தப்படுவீர்கள்.

குதிரை

நீங்கள் முதலில் குதிரையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சாகசக்காரர், உங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உங்கள் சுதந்திரத்தை மதிக்கிறீர்கள், நீங்கள் கடினமான சூழ்நிலைகளை கடந்து செல்கிறீர்கள்.

ஆந்தை

நீங்கள் முதலில் ஆந்தையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் புத்திசாலி, ஆனால், நுண்ணுணர்வு உள்ளவர். நீங்கள் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெர்ஃபெக்‌ஷனிஸ்ட். உங்கள் கவனம் வாழ்க்கையில் முன்னேற உதவுகிறது.

நரி

நீங்கள் முதலில் நரியைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சற்று தனிமையானவராக இருக்கலாம். ஆனால், உணர்ச்சிவசப்பட்டு தைரியமாக இருப்பீர்கள். மக்கள் உங்களை வசீகரமாகவும் நகைச்சுவையாகவும் பார்க்கலாம். மேலும், நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.

குரங்கு

நீங்கள் முதலில் குரங்கைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் விளையாட்டாகவும் சிரித்து மகிழவும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் உண்மையான எண்ணங்களை நீங்கள் மறைத்துவிடலாம், நீங்கள் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் உணருகிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு சவாலாக மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

யானை

இதைத்தான் நீங்கள் முதலில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் பலமான மனப்பான்மை கொண்டவர் என்றும், மற்றவர்களின் அன்பிலும் அக்கறையிலும் தன்னலமற்றவர் என்றும் அர்த்தம். மக்கள் உங்களிடம் அதே கவனத்தைக் காட்டாவிட்டாலும், நீங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வீர்கள், எப்போதும் மற்றவர்களுக்குச் சிறந்ததையே விரும்புவீர்கள்.

ஆமை

நீங்கள் இதை முதலில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம், ஆனால் நீங்கள் மிகவும் உள்முகமாக இருக்க முடியும். நீங்கள் உணர்திறன் உடையவராக இருப்பீர்கள், ஆனால் ஒருவர் எப்படி உணருகிறார் என்பதை உணர்வதில் சிறந்தவர்.

கரடி

நீங்கள் முதலில் கரடியைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் வலிமையானவர், தைரியமானவர் என்று அர்த்தம். கடினமான காலங்களில் மக்கள் உங்களைச் சார்ந்து இருப்பார்கள். நீங்கள் மிகவும் அன்பானவர் மற்றும் மற்றவர்களைப் பாதுகாப்பவர் என்று கூறப்படுகிறது.

ஒட்டகச்சிவிங்கி

நீங்கள் முதலில் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் ஒரு நடைமுறை மற்றும் பொறுமையான நபர் என்று அர்த்தம். நீங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களை நேர்மறையாகவும் உறுதியாகவும் வைத்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion personality test find your character