New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/fox-1-3.jpg)
Optical illusion challenge Image: Dudolf
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செந்நிற பாண்டாக்கள் இடையே மறைந்திருக்கும் 3 நரிகளை10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால், நீங்கள் செம ஷார்ப்.
Optical illusion challenge Image: Dudolf
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றுவேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டு மறைக்கப்பட்ட விலங்கு உங்கள் கண்களை ஏமாற்றும் விதமாக, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செந்நிற பாண்டாக்கள் இடையே மறைந்திருக்கும் 3 நரிகளை10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அவை எந்த அளவுக்கு சுவாரசியமானவை என்றால், ஒரு குழப்பம் சுவாரசியமாக முடிவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷனில் குழப்பம்தான் சுவாரசியம். எந்த அளவுக்கு குழப்பம் கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும்.
ஆப்டிகல் இல்யூஷனில் சுவாரசியம் எப்படி தொடங்கும் தெரியுமா? இந்த படத்தில் மறைந்திருக்கும் குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்ததும், எளிதாக இருக்கிறதே என்று தேடத் தோடங்குவார்கள். தேடத் தொடங்கியதும் உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும். எங்கே மறைந்திருக்கும் என்று யோசித்தால் உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். பிறகு, வடிவேலு பாணியில் ‘ஸ்பா… முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும். அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று வெறித்தனமாக விடையைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் இந்த டிஜிட்டல் ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த படத்தில் நிறைய செந்நிற பாண்டா கரடிகள் உள்ளன. இந்த செந்நிற பாண்டாக்கள் இடையே 3 நரிகள் மறைந்திருக்கின்றன. அந்த 3 நரிகளும் எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு கடினமானது.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 நரிகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். செந்நிற பாண்டாக்கள் இடையே 10 நொடிகளுக்குள் 3 நரிகளைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் 3 நரிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஒவ்வொரு பாண்டாவின் முகத்தையும் கவனமாகப் பாருங்கள் 3 நரிகளின் முகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 நரிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக 3 நரிகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.