scorecardresearch

இந்த பெண்ணுக்கு 3 கால்களா அல்லது 2 கால்களா? குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நெட்டிசன்கள்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் நெட்டிசன்களை முடிவில்லா குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. சேர்-ல் அமர்ந்திருக்கும் இந்த பெண்ணுக்கு 3 கால்களா அல்லது 2 கால்களா என்று கேட்டு சர்ச்சை செய்து வருகின்றனர்.

Optical Illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் நெட்டிசன்களை முடிவில்லா குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. சேர்-ல் அமர்ந்திருக்கும் இந்த பெண்ணுக்கு 3 கால்களா அல்லது 2 கால்களா என்று கேட்டு சர்ச்சை செய்து வருகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நவீன வாழ்க்கையில் வேலை நெருக்கடிகளில் சிக்கித் திணரும் மனிதர்களுக்கு சற்று ரிலாக்ஸாக ஒதுங்குவதற்கான இடமாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானவையாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிப்பது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தைத் தேடுவதைப் போன்றது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குழப்பத்திற்கான காரணம், சேர்-ல் அமர்ந்திருக்கும் பெண் கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார். ஆனால், அவருக்கு மூன்று கால்கள் தெரிகிறது. மனிதர்களுக்கு இரண்டு கால்கள்தானே. ஆனால், இந்த பெண்ணுக்கு 3 கால் எப்படி என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். 3 கால்களும் அந்த பெண்ணின் கால்களைப்போல இந்த படத்தில் பதிவாகி இருக்கிறது.

இந்த வித்தியாசமான படம், மனதைக் குழப்பும் விதமாக உள்ளது. மூன்று கால்கள் கொண்ட ஒரு பெண் விமான நிலையத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. உண்மையில் அந்த பெண்ணுக்கு மூன்று கால்கலா? இந்த புகைப்படத்தை சிறிது நேரம் உற்று கவனியுங்கள்.

முன்று கால்களைக் கொண்ட இந்த பெண்ணின் தோற்றம் தற்செயலாக புகைப்படத்தில் பதிவாகி இருக்கிறது. ஒரே நிற ஜீன்ஸ் மற்றும் அதே காலணிகளுடன் நாற்காலியில் மற்றொரு நபருடன் அந்தப் பெண் அமர்ந்திருக்கிறார். அவள் அருகில் அமர்ந்திருப்பவரை மறைக்கும் கோணத்தில் படம் கிளிக் செய்யப்பட்டுள்ளது. இரண்டு கால்களையும் தரையில் ஊன்றித் துணையாக அமர்ந்திருக்க, அந்தப் பெண் தன் கால்களைக் குறுக்காகக் மடக்கி அமர்ந்திருக்கிறாள். இங்கேதான் ஆப்டிகல் இல்யூஷன் உருவாகிறது. அந்த 3 கால்களில் இரண்டு கால்கள் பெண்ணின் கால்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.

தி சன் செய்தியின்படி இந்த படம் முதன்முதலில் இணையத்தில் ஒரு இம்குர் பயனர் மூலம் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து, “எப்படி நடந்தது என்று மூளை சொல்வதற்கு முன்பு இந்த படத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்க்க வேண்டியுள்ளது” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த பெண்ணுக்கு மூன்று கால்களா? அல்லது இரண்டு கால்களா? என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு பயனர், “நான் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்” என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், “இறுதியாக எனக்கு பதில் கிடைத்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் அந்த விடையைக் கண்டுபிடித்தேன்” என்று கூறியுள்ளார். ஒரு பயனர் “நீங்கள் இந்த படத்தை ஒருமுறை சரியாகப் பார்த்த பிறகு, அதை மீண்டும் தவறாகப் பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion showing woman with three legs netizens confused