New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/13/AIUtrWTF1pmTOC0pLOP5.jpg)
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 'BOLD' என்ற வார்த்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 'GOLD' என்ற வார்த்தையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சிந்தித்து பாருங்கள்.
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) புகைப்படம் வைரலாக பரவி பலரையும் குழப்பி வருகிறது. இப்படத்தில் திரும்பத் திரும்ப "BOLD" என்ற வார்த்தை ஒரே மாதிரியாக தோன்றுகிறது. ஆனால், அந்த வார்த்தைகளுக்கு இடையே "GOLD" என்ற வார்த்தை ஒளிந்திருக்கிறது. இப்படத்தை முதன்முதலாக பார்ப்பவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாத மாதிரி தோன்றலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால், இப்படத்தின் உண்மையான சூட்சுமம் புரியும். சமூக வலைதள பயனர்கள் இந்தப் புதிருக்கான விடையை கண்டுபிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் கண்களை ஏமாற்றும் ஒரு வகை விளையாட்டு. இவை கண்கள் மற்றும் மூளை ஆகிய இரண்டையும் ஒருசேர வேலை செய்ய வைக்கும் காட்சி தந்திரங்கள். ஒரு பொருள் பார்க்க ஒன்று போலவும், உண்மையில் வேறொன்றாகவும் இருக்கும் போது தான் ஆப்டிகல் இல்யூஷனின் உண்மையான மாயாஜாலம் தொடங்குகிறது.
இன்றைய இணைய உலகில் இதுபோன்ற புதிர்களுக்கும், பட விளையாட்டுகளுக்கும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவை பொழுதுபோக்கிற்கான ஒரு கருவியாக மட்டுமல்லாமல், மக்களின் கவனிக்கும் திறன் மற்றும் மன விழிப்புணர்வு ஆகியவற்றையும் சோதிக்கின்றன. குறிப்பாக, இது போன்ற புதிர்கள் எல்லா வயதினருக்கும் பிடிக்கும். மேலும், மக்கள் அவற்றை பகிர்ந்து ஒருவருக்கொருவர் சவால் விடுவதையும் விரும்புகிறார்கள்.
இந்த புதிரின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், "GOLD" என்ற வார்த்தை மிகவும் தந்திரமாக மறைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் கண்களுக்கு நேராக இருந்தும் கூட எளிதில் புலப்படாது. எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மக்கள் இதை பகிர்ந்து தங்கள் நண்பர்களுக்கு சவால் விடுகிறார்கள்.
அதன்படி, இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தை பார்த்த உடனேயே 'GOLD' என்ற வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் உண்மையிலேயே நீங்கள் கில்லாடி தான். உங்களுடைய கண்பார்வை மற்றும் கவனிக்கும் திறன் கூர்மையாக இருக்கிறது என்பதை நீங்கள் உணரலாம்.
எனினும், உங்களால் இப்படத்தில் இருந்து 'GOLD' என்ற வார்த்தையை கண்டறிய முடியவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற புதிர்களை தொடர்ச்சியாக விளையாடும் போது உங்களாலும் எளிதாக பதிலளிக்க முடியும். மேலும், இப்படத்தில் 'GOLD' என்ற வார்த்தை எங்கு இருக்கிறது என்பதையும் நாங்கள் வட்டமிட்டு காட்டி இருக்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.