scorecardresearch

20 நொடிதான்… காளான்களுக்கு இடையே மறைந்து ஏமாற்றும் எலியைக் கண்டுபிடிங்க!

Optical illusion: கண்ணைக் கவரும் விதத்தில் கலர் கலராக இருக்கும் காளாண்களுக்கு இடையே மறைந்திருக்கும் எலியை 20 நொடிகளுகுள் கண்டுபிடிப்பது என்பது எளிதாகத் தெரியலாம். ஆனால், கடினமானது. கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

Optical illusion, Optical illusion image, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், எலியைக் கண்டுபிடிங்க, Optical illusion game, spot the rat, can you spot the rat, buzz, Optical illusion quize

Optical illusion game: “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” கவிஞர் மருதகாசி எழுதிய இந்த பாடல் தத்துவப் பாடலாக இருந்தாலும் இந்த பாடல் இன்றைக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லா குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது, ஆச்சரியத்தை அளிக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஹங்கேரிய எழுத்தாளரும் ஓவியருமான Gergely Dudás என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வண்ண வண்ணமான காளான்களுக்கு இடையே ஒரு குட்டி எலி மறைந்திருந்து எட்டிப் பார்க்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.

‘கலர் கலர்’ இருக்கிற காளாண்களுக்கு இடையே மறைந்திருக்கிற எலியை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். எலியைக் கண்டுபிடிக்க முடியாமல் பலரும் தடுமாறியதாக நியூயார்க்போஸ்ட் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தின் உளவியலாளரும் மனித புலனுணர்வு நிபுணருமான டாக்டர் குஸ்தவ் குன், “நாம் பொதுவாக புலன் உணர்வை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அன்றாடப் பணிகளைச் செய்யும் கடின உழைப்பைப் பற்றி அரிதாகவே சிந்திக்கிறோம்.” என்கிறோம்.

கண்ணைக் கவரும் விதத்தில் கலர் கலராக இருக்கும் காளாண்களுக்கு இடையே மறைந்திருக்கும் எலியை 20 நொடிகளுகுள் கண்டுபிடிப்பது என்பது எளிதாகத் தெரியலாம். ஆனால், கடினமானது. கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இடது பக்கம் கீழ்ப் பகுதியில் ஒரு காளாணுக்கு பின்னால் எலி மறைந்திருந்து பார்ப்பதைப் பாருங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion spot the hidden rat in this image within 20 seconds