Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி வருகிறது. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தீர்கள் என்றால் அதன் சுவாரசியத்தில் ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக இணையத்தை கலக்கி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமனாது. இந்த கார்டூனில் 6 விலங்குகள் மறைந்திருக்கிறது. அவற்றை 6 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்களும் உலக சாதனை செய்யலாம். முயற்சி செய்து பாருங்க.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்த மாத தொடக்கத்தில் பாவினி ஆன்லைன் என்ற தளத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இதில் 6 விலங்குகள் மறைந்திருக்கிறது. அந்த 6 விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியுமா என்று நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருவதால் வைரலாகி வருகிறது: அதிலும் 6 விலங்குகளையும் 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்பதுதான் சவால்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள 6 விலங்குகளையும் இதுவரை 17% மக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளனர். அதிலும் நீங்கள் 6 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால் உலக சாதனையை முறியடிக்கலாம்.
ஒரு நல்ல இயற்கை காட்சியாக வரையபட்டுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைகள், புல்வெளிகள், மரங்கள் மற்றும் பல்வேறு புதர்கள் இருக்கிறது. ஆனால், கூர்ந்து கவனித்தால், இந்த படத்தில் ஆறு உயிரினங்கள் மறைந்திருப்பது தெளிவாகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள 6 விலங்குகளையும் 6 வினாடிகளுக்குள் கண்டுபிடித்து உலக சாதனையை முறியடிக்கவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள் விட்டுத் தள்ளுங்கள். அதற்கு பிறகு, கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்காக விடை தருகிறோம்.

மலைகளுக்கு எதிராக மறைக்கப்பட்ட சாம்பல் நிற ஒட்டகம், செதில்களுக்கான பட்டையுடன் இடது புறம் உள்ள மரத்தில் ஒரு முதலை, வலது புறம் மரம் மற்றும் புல் இரண்டிற்கும் இடையே மறைந்திருக்கும் ஒரு சேபியா கலர் மான், புல்லில் ஒரு பாம்பு மற்றும் பூவில் ஒரு பட்டாம்பூச்சி, மரத்தின் இலையில் ஒரு முயல் ஆகியவை இருப்பதைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“