ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இதை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன.
Advertisment
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
கீழே உள்ள தந்திரமான புதிர் படம் 1880களில் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஓவியத்தில் நீங்கள் பார்ப்பது வெறும் நாய் மட்டும் அல்ல, இதில், நாய் உரிமையாளரின் முகமும் மறைந்திருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான இன்றைய சவால். உங்களின் கவனிப்பு திறமைக்கு இது ஒரு சிறந்த சோதனையாக இருக்கும்.
நாயின் உரிமையாளரின் முகத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
இந்த படத்தை உன்னிப்பாகப் பார்த்து, நாயின் ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனின் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். இது மிகவும் தந்திரமாகத் தோன்றலாம், ஆனால் படத்தை வலது பக்கமாக கீழே சாய்த்தால் அது உதவக்கூடும். நாயின் காதில் மறைந்திருக்கும் மையத்தில் நாய் உரிமையாளரின் முகம் தெரியும். இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
பதிலுக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்
நாய் படத்தில் மறைந்திருக்கும் மனிதனின் முகத்தை வெறும் 15 வினாடிகளில் அடையாளம் காண முடிந்தால், அது உங்களின் அசாத்திய புத்திசாலித்தனத்தின் அடையாளமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடினமான புதிர்களுடன் உங்கள் மூளைக்கு எவ்வளவு பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“