/tamil-ie/media/media_files/uploads/2023/06/panda-0.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரமான சவால், கோட் சூட் அணிந்த மணிதர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடியுமா? என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க செம ஷார்ப் தலைவா, தலைவி!
இந்த படத்தில் கருப்பு வெள்ளை கோட் சூட் அணிந்த மனிதர்கள் இடையே மறைக்கப்பட்டுள்ள பாண்டா எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் நிஜமாவே செம ஷார்ப். ஏனென்றால், இது ஒரு மிகவும் ஒரு தந்திர்மான சவால்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/panda-0-1.jpg)
இந்த படம் Joao Seabra தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள நபர்கள் ஒரே மாதிரியாகத் தோன்றலாம், ஆனால் அது உங்களை முட்டாளாக்கும். மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கக்கூடிய ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா அல்லது வடிவங்களில் என்ன வித்தியாசம் தெரிகிறது என்று கவனம் செலுத்துங்கள். வித்தியாசமான வடிவங்களையும் பொருட்களையும் அடையாளம் காண்பதில் நமது மூளை சிறந்து விளங்குகிறது.
சூட் அணிந்தவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனிதர்களுடன் ஒரு பாண்டாவு இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எங்கோ ஒரு இடத்தில் புத்திசாலித்தனமாக மறைந்திருக்கும் பாண்டாவை கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் பாண்டாக்களைக் கண்டுபிடிப்பது என்பது இப்போதெல்லாம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது போன்ற பல புதிர்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வலம் வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/panda-0-2.jpg)
இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் திறமைகளை சோதனைக்கு உட்படுத்துகிறது. நீங்கள் வேடிக்கையாக இருப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், உங்கள் கூர்மையான பார்வைத் திறன் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த புதிர் உதவும்.
இந்நேரம் கோட் சூட் மனிதர்கள் இடையே மறைக்கப்பட்டுள்ள பாண்டாவை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான் தலைவா.
ஒருவேளை உங்களால் இன்னும் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் எந்தப் பகுதியையும் மையப்படுத்தாமல் முழுப் படத்தையும் நன்றாகப் பார்க்கத் தொடங்குங்கள்.
நீங்கள் இன்னும் பாண்டாவை கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக பாண்டா எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Panda-1-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.