/indian-express-tamil/media/media_files/2025/07/22/mountain-lion-1-2025-07-22-15-44-31.jpeg)
காட்டுப்பன்றியைக் குறிவைக்கும் மலைச் சிங்கத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Facebook/ Rio Mora National Wildlife Refuge)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்களுடைய முயற்சி எல்லாமே உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/22/mountain-lion-1-2025-07-22-15-44-31.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டுப்பன்றியைக் குறிவைக்கும் மலைச் சிங்கத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் புதிர்கள்தான் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்யும்போது நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/22/mountain-lion-2-2025-07-22-15-44-31.jpeg)
2019-ம் ஆண்டு பிற்பகுதியில் ஒரு வைல்ட்லைஃப் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட இந்த படத்தை வனவிலங்குகள் பூங்காவான Rio Mora National Wildlife Refuge சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டுப்பன்றியைக் குறிவைக்கும் மலைச் சிங்கத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் என்பவை நமது மூளையை ஏமாற்றி, நாம் பார்க்கும் விஷயங்கள் உண்மையில் இருப்பதைவிட வித்தியாசமாகத் தோன்றும்படி வடிவமைக்கப்பட்ட படங்களாகும். இவை பெரும்பாலும் நமது பார்வை மற்றும் மூளையின் செயலாக்க முறையைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு வேடிக்கையான வழியாகும். இத்தகைய சவால்களில், ஒரு குறிப்பிட்ட உருவம் அல்லது பொருளைக் கண்டுபிடிப்பது, மறைந்திருக்கும் வடிவத்தைக் கண்டறிவது அல்லது ஒரு படத்தின் இரு அர்த்தங்களுக்கு இடையில் மாறுவது போன்ற பணிகள் இருக்கும். இந்த சவால்கள் நமது கவனத்தை கூர்மைப்படுத்துவதோடு, ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்க நம்மைத் தூண்டுகின்றன. மேலும், ஒரு ஆப்டிகல் இல்யூஷனை முதன்முதலில் சரியாகப் புரிந்துகொள்ளும் போது கிடைக்கும் "அஹா" தருணம் மிகவும் திருப்திகரமானதாக இருக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/22/mountain-lion-2-2025-07-22-15-44-31.jpeg)
நீங்கள் இந்நேரம் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான் பாஸ்.
ஒருவேளை உங்களால், மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/22/mountain-lion-3-2025-07-22-15-44-31.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.