New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/WKm6Tizs6cYndydf4bMg.jpg)
Optical illusion: இந்தக் குறிப்பில் இடம்பெற்றுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், திராட்சைகளுக்குள் ஒளிந்திருக்கும் பூனையை பார்த்த உடனேயே உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்ற விளையாட்டு சமீப நாட்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. முன்னதாக, பத்திரிகைகளில் புதிராக வந்த இந்த வகையான விளையாட்டுகளுக்கு தற்போது டிஜிட்டல் உலகில் ஆப்டிகல் இல்யூஷன் என்று பெயரிட்டுள்ளனர். இதை விளையாடும் போது நம்முடைய புத்திக் கூர்மையை சோதிக்க முடிவதுடன், மனதுக்கும் ரிலாக்ஸாகவும் இருக்கும்.
இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல்வேறு விதமாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பொருள் மறைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படும். உதாரணத்திற்கு, விலங்கு, பறவைகள் அல்லது ஏதாவது ஒரு எழுத்தாக இருக்கும். அவற்றை எவ்வளவு விரைவாக நாம் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது மூளை ஷார்ப்பாக இருப்பதாக அறிந்து கொள்ள முடியும்.
இது போன்ற சவால் நம்முடைய பொழுதுபோக்கிற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், நாள்தோறும் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே மிக அதிகமாக இருக்கிறது. அப்படி பயன்படுத்தும் செல்போனை, இது போன்ற விஷயங்களுக்காக நாம் உபயோகிக்கும் போது, அவை நம் புத்தியை கூர்மையாக்குவதற்கு உதவியாக இருக்கும்.
அந்த வகையில், இந்த குறிப்பில் இடம்பெற்றுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், திராட்சைகளுக்குள் ஒளிந்திருக்கும் பூனையை பார்த்த உடனேயே உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். பூனையின் நிறமும், திராட்சைகளின் நிறமும் ஒரே மாதிரியாக இருப்பதால், இதனை கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கும்.
எனினும், இதில் மறைந்திருக்கும் பூனையை 5 வினாடிகளில் இருந்து 15 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடித்து விட்டால், உண்மையிலேயே நீங்கள் பலே கில்லாடி தான். படத்தை சற்று உன்னிப்பாக கவனித்தால் கூட உங்களால் நிச்சயம் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். அப்படி விரைவாக நீங்கள் கண்டுபிடித்தால், உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், உங்களால் பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பூனை இருக்கும் இடத்தை நாங்கள் வட்டமிட்டு காட்டுகிறோம். இது போன்று நிறைய ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை தொடர்ந்து முயற்சி செய்யும் போது, உங்களால் அடுத்த படங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.