“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் வாழ்க்கை தத்துவத்துக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பொருந்தும்.
ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. மேலோட்டமாக பார்க்கும்போது தெரியும் படம் உற்று கவனிக்கும்போது வேறு ஒன்றாகத் தெரியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர்.
பிரபல ஃபிட்னஸ் ஆர்வலரான ஜோரான் ஆர்சிலா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், கடைசி வரை அவர் தான் நிறைமாத கர்ப்பிணி என்பதை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வயிறு தெரியாமல் மறைத்துள்ளார். இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவர் நிறை மாத கர்ப்பிணி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படம் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் அதன் உண்மையான தோற்றத்தைப் பார்க்க வேண்டும் என்றால் பார்க்கும் கோணம் மிகவும் முக்கியம். ஆப்டிகல் இல்யூஷன் படம் அல்லது வீடியோவை சரியான கோணத்தில் பார்ப்பவர்கள் மட்டுமே அதன் அசலான தோற்றத்தைப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் குழப்பமடைந்து அதன் மாயஜாலத்தைக் கண்டு திணறிப் போகிறார்கள்.
அப்படி ஒரு மாயாஜாலம் காட்டும் ஆப்டிகல் இல்யூஷன் வீடியோவை, பிரபல ஃபிட்னஸ் ஆர்வலரான ஜோரான் ஆர்சிலா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோவில், ஜோரான் ஆர்சிலா கடைசி வரை தான் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல், வயிறு தெரியாமல் மறைத்திருக்கிறார். 35 வார கர்ப்பிணியான ஜோரான் ஆர்சிலா வலது பக்கம் திரும்பும் போதுதான் நிறை சூலியான அவருடைய வயிறு தெரிகிறது. ஃபிட்னஸ் ஆர்வலர் ஜோரான் ஆர்சிலாவை முன்புறத்தில் நேராகப் பார்க்கும்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவே இல்லை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோவின் மாயாஜாலம் நெட்டிசன்களைக் குழப்பியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியான ஜோரான் ஆர்சிலா வயிறு தெரியாமல் மறைக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பலரும், நிறைமாத கர்ப்பிணி ஆனால், வயிறு தெரியவே இல்லை பாருங்க. உண்மையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ நம் கண்களை ஏமாற்றுகிறது என்று பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“