“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகளுக்கு பொருத்தமானது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம், விரிவடையும் கருந்துளை மாயாஜாலம் என்று கூறுகின்றனர். வெள்ளை நிற பின்னணியில், கருப்பு புள்ளிகளைக் கொண்ட படத்தின் மையத்தில், நீள்வட்டத்தில் அவுட்லைன் இல்லாத ஒரு கருப்பு புள்ளி உள்ளது. இந்த மங்கலான கருப்புத் திட்டு, ஒரு கருந்துளை போல் தெரிகிறது. நீங்கள் இந்த கருந்துளையைப் பார்க்கும்போது, அது விரிவடைந்து கொண்டே இருக்கும்.
இந்த படத்தின் நடுவில் உள்ள கருந்துளை நாம் பார்க்கும் வரை விரிவடைந்து கொண்டே இருப்பது தெளிவாகத் தெரிந்தாலும், 20% பேர் அது விரிவடைவதை உணரவில்லை என்று கூறுகின்றனர். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்த பார்வையாளர்களுக்கு இடையேயான இந்த அப்பட்டமான வேறுபாடு, இந்த மாயாஜாலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய சரியான புரிதலை நோக்கி கவனம் செலுத்துகிறது.
நாம் இந்த படத்தை உற்றுப் பார்க்கும்போது கரும்புள்ளி அல்லது கருந்துளை விரிவடைவதை பெரும்பாலான மக்கள் பார்க்கிறார்கள். கருந்துளை ஒரு வெற்று இருண்ட பொருளின் மாயாஜாலத்தை உருவாக்குகிறது. இது வெள்ளை பின்னணியில் தொடர்ந்து பரவி கருப்பு நீள்வட்டத்தில் விரிவடைகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நடக்கும் மாயாஜாலத்தை உணராதவர்கள் இதை ஒரு கருப்பு மை என்று பார்க்கிறார்கள். மாயாஜாலத்தை உணராதவர்கள் கருந்துளை விரிவடையவில்லை என்று கூறுகிறார்கள்.
கருந்துளை விரிவடையும் மாயாஜாலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், விட்டம் மாற்ற விகிதங்கள் ஆகியவை இந்த இல்யூஷன் இயக்கத்துடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
“இந்த பிரகாசமான/கருப்பு இல்யூஷன் படத்தின் அடிப்படை என்னவென்றால், பொதுவாக, ஒளியின் உணர்தல் இயற்பியல் அளவுருக்களுடன் நேரடியாக தொடர்புடையது அல்ல; எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புலனுணர்வு கருதுகோள்களை உருவாக்க காட்சி அமைப்பு சூழலியல் ஒழுங்குமுறைகள் அல்லது கட்டுப்பாடுகளை நம்பியுள்ளது.” என்று இந்த ஆப்டிகல் இல்யூஷனை விளக்கும் ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. மே 2022, ஆய்வு மனித நரம்பியல் அறிவியலில் ஃபிரான்டியர்ஸில் வெளியிடப்பட்டது.
“பொதுவாக, கீழே உள்ள வடிவத்தைப் பார்க்கும்போது, பார்வையாளர்களின் அகநிலை உணர்வு படிப்படியாக விரிவடைந்து வரும் மத்தியப் பகுதியின் உணர்வால் வகைப்படுத்தப்படுகிறது என்றும்இது சில வினாடிகளில் நிகழ்கிறது” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஆய்வின் பங்கேற்பாளர்களில் 20% க்கும் அதிகமானோர் கருந்துளை விரிவடைவதை உணரவில்லை.
மேலும், இது விரிவடைவது அல்லது சுருங்குவது என்பது நமது சூழலால் மட்டும் வழிநடத்தப்படுவதில்லை. இது நமது கற்பனை மற்றும் உணர்வின் மூலம் இயக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.