scorecardresearch

இதில் தெரிவது காக்கையா, முயலா? உங்க உள்ள உறுதியை சோதிக்கும் அபூர்வ படம்

உங்களுக்கு இந்த படத்தில் தெரிவது காக்கையா? முயலா? என்று கூறி உங்கள் உள்ள உறுதியைத் தெரிந்துகொள்ளலாம். இந்த அபூர்வ படத்தைப் பார்த்து உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இதில் தெரிவது காக்கையா, முயலா? உங்க உள்ள உறுதியை சோதிக்கும் அபூர்வ படம்

புகைப்படங்கள், படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிப்பவைகளாக இருந்தாலும், அந்த படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்கள் இருந்தால் அதை அறிந்து கொள்ள மனதில் ஆவல் ஏற்படுவது இயல்பானது.

தற்போது சமூக ஊடகங்களில் ஆப்டிகல் இலுசியன் படங்கள் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் வெளியிடப்பட்டு இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் என்று கேட்டு விதவிதமாக படங்கள் பகிரப்படுகின்றன. அத்தகைய படங்கள், பெரும்பாலும் நம்முடைய மூளைக்கும் பார்வைக்கும் சவாலாக இருக்கும். ஆனால், தற்போது வெளியாகி உள்ள ஒருபடத்தில் உங்களுக்கு தெரிவது காக்கையா, முயலா என்று கேள்வி எழுப்பி, உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதோ அதை வைத்து உங்கள் உள்ள உறுதியையும் ஆளுமையையும் குண நலனையும் கூறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

பிரைட் சைட் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த படம், நீங்கள் உலகை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை விளக்குகிறது. இந்த படத்தில் ஒரு காகமும் முயலும் இருக்கிறது. இதில், உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறது என்பதைப் பொறுத்து, உங்கள் ஆளுமை உறுதியானவரா அல்லது கூச்ச சுபாவம் உள்ளவரா என்பதை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் இந்த படத்தை பார்க்கும்போது, முதல்பார்வையில், காக்கையைப் பார்த்தால், நீங்கள் உறுதியானவராக இருப்பீர்கள்.

அதே நேரத்தில், நீங்கள் காக்கைக்கு பதிலாக, முதல்பார்வையில், முயலைப் பார்த்தால், நீங்கள் இயல்பாகவே மிகவும் இனிமையான மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் அனைவராலும் விரும்பப்படும் ஆளுமை கொண்டவராகவும் இருப்பீர்கள்.

இதனால், இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், தாங்கள் முதலில் என்ன பார்த்தார்கள் என்பதை கம்மெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், பலரும் தங்களுக்கு காக்கை, முயல் இரண்டுமே தெரிகிறது என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion you are seeing crow or rabbit know your personality