Optical illusion game: இன்றைய இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களின் கூர்மையான பார்வைத் திறனுக்கும் யோசிக்கும் திறனுக்கும் சவால் விடுகிறது. உங்களுக்கு ஜீனியஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்டு ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள 16 புலிகளையும் 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொண்டவர்களில் ஜீனியஸ்களாக இருக்கிற 1 சதவீதம் பேர் மட்டும்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்கள் ஜீனியஸ் ஆக வேண்டுமா? அப்போ ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும், இந்த மனதைக் கவரும் மூளைக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகளில் இருந்து ஒருவர் விலகிச் செல்லவே முடியாது. ஆப்டிகல் இல்யூஷ்ன் படங்கள் உங்கள் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எளிதாக உங்களை நம்ப வைக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பற்றி கவித்துவமாக சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு தந்திரம், தீர்க்க முடியாத புதிர், மாயத் தோற்றம், தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, அது உங்கள் திறனை மேம்படுத்தும் பயிற்சி என்று சொல்லலாம்.
இந்த ஆப்டிகல் இயூஷன் படம் இணையத்தில் பரவலாக வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்று பெரும் சவாலாக இருந்து வருகிறது. டிக் டாக் பயனர் ஹெக்டிக் நிக் இந்த சவாலை வெளியிட்ட்டுள்ளார். இந்த படத்தில் வெளிப்படையாக தெரியும் புலிகள் மட்டுமில்லாமல் இன்னும் சில புலிகள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த படத்தில் 16 புலிகள் இருக்கிறது. அவற்றை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், 1 சதவீதம் ஜீனியஸ்களில் நீங்களும் ஒருவர். ஜீனியஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அப்போ ட்ரை பண்ணி பாருங்கள். 1 நிமிடத்தில் எத்தனை புலிகளைக் கண்டுபிடிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்கள் மூளை செயல்படும் விதம் பற்றி கூறுகிறோம்.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையில், இந்தப் படத்தில் உள்ள எல்லா புலிகளையும் 1 நிமிடத்துக்குள் கண்டுபிடியுங்கள். 1 நிமிடத்துக்குள் 16 புலிகளையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான்.
ஆனால், சிலர் 7 புலிகளைத்தான் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறுகிறார்கள். சிலர் 12 புலிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள்.
இந்த சவாலில் 80% பேர் 1 நிமிடத்துக்குள் 12 புலிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் தங்கள் வலது மூளையை விட இடது பக்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துள்ளனர். அத்தகையவர்கள் அவர்களின் கற்பனை மற்றும் பகல் கனவு காரணமாக அவர்களின் இலக்குகளில் இருந்து எளிதில் திசைதிருப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
12-க்கும் குறைவான புலிகளை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் உங்கள் மூளைக்கு புரோட்டீன் பூஸ்ட் தேவைப்படுகிறது. அடுத்த முறை நீங்கள் தூங்கி எழுந்தவுடன் அல்லது தூக்கத்தில் இருக்கும்போது பரிசோதனை செய்ய வேண்டாம். உங்கள் மூளையை அதிக வேலை செய்ய செய்ய வைக்க கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக தூங்குங்கள். பிறகு ரிலாக்ஸாக இந்த சவாலை எதிர்கொள்ளுங்கள்.
எப்படியோ, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 16 புலிகள் எங்கே இருக்கின்றன என்று உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். அடுத்த முறை சிறப்பாக செயல்பட்டு விடை கண்டுபிடியுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.