New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/18/YsS9ICPsPkhiLmjzAL3Z.jpg)
அடர் காட்டின் நடுவே வேட்டைக்காரன்.. அந்த இடத்தில் ஒளிந்திருக்கும் யானை; 5 செகண்ட்ல கண்டுபிடிச்சா கில்லாடிதான்!
அடர்ந்த காட்டில் துப்பாக்கியுடன் நிற்கும் வேட்டைக்காரனின் படத்தில், மரங்கள் மற்றும் பசுமையான தாவரங்கள் காணப்படுகின்றன. கிளைகள், இலைகள் மற்றும் நிழல்களில் ஒரு யானை நுட்பமாக மறைக்கப்பட்டுள்ளது. அதனை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால்.
அடர் காட்டின் நடுவே வேட்டைக்காரன்.. அந்த இடத்தில் ஒளிந்திருக்கும் யானை; 5 செகண்ட்ல கண்டுபிடிச்சா கில்லாடிதான்!
Optical Illusion Test: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள்தான் இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்கள், செய்தி வலைதளங்கள், காணொளிகள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தப் புதிர்களை நாம் நிறைய பார்க்க முடிகிறது.
இதன் தொடக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்தால் பத்திரிகைகளில் வெளியான புதிர்கள்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஏனெனில், முன்னர் காலத்தில் பத்திரிகைகள், செய்தித் தாள்கள் தான் பொழுதுபோக்காக மக்களுக்கு இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அனைவரது கரங்களிலும் ஸ்மார்ட்போன் இருக்கின்றன. இதுவே மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. அதன் பரினாம வளர்ச்சியாக தான் ஆப்டிகல் இல்யூஷன் உருமாறி இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷனை விளையாடுவதன் மூலம் நம்முடைய பார்வைத் திறன் கூர்மையாவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இருக்கும். அவை நாம் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதை சவால் செய்கின்றன, மேலும் பெரும்பாலும் நம் சொந்த உணர்வுகளை நாமே கேள்வி கேட்கும்படி விட்டுவிடுகின்றன. நம்முடைய அறிவு வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் சில சமயங்களில் அமைகிறது. உங்களுக்காக ஒரு கடினமான சவால் எங்களிடம் உள்ளது.
முகநூலில் Minion Quotes என்ற பக்கத்தில் சுவாரஸ்யமான காட்சி மாயை சவால் பகிரப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் அடர்ந்த காட்டில் துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு வேட்டைக்காரனின் படத்தை நீங்கள் காண்பீர்கள். அவரது சுற்றிலும் மரங்கள் மற்றும் பசுமையான தாவரங்கள் காணப்படுகின்றன. முதலில் பார்க்கும்போது இது ஒரு எளிமையான, சாதாரண காட்சியாகத் தான் தோன்றுகிறது. ஆனால் இதில் ஒரு திருப்பம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு யானை, கிளைகள், இலைகள் மற்றும் நிழல்களில் நுட்பமாக மறைக்கப்பட்டுள்ளது. “நீங்கள் யானையை காண முடியுமா?” எனும் தலைப்புடன், அந்த படம் பார்வையாளர்களை சவாலுக்கு அழைக்கிறது. கவனம் செலுத்தி, மறைந்துள்ள யானை படத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதோ அந்த படம்:
அந்த யானை இங்கே இருக்கிறது! மரங்களின் இடையில், வேட்டைக்காரருக்கு சற்று மேலே, இடது பக்கமாகப் பாருங்கள். மரக்கிளைகளும் இலைகளும் சேர்ந்து யானையின் உருவத்தை உருவாக்குகின்றன. இல்லையா? தும்பிக்கை, தந்தம் மற்றும் காது கூடத் தெளிவாகத் தெரிகிறது. உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?
உங்கள் காட்சி கூர்மையின் உண்மையான சோதனை. பசுமையான இலைகளுக்குள் ஒரு யானையின் வடிவம் மறைந்திருக்கிறது. கோடுகள் மற்றும் அமைப்புகளால் திறமையாக மறைக்கப்பட்டுள்ளது, அவை பின்னணியுடன் தடையின்றி கலக்கின்றன. சரி, இப்போது அந்த யானையை இன்னும் தீவிரமாகத் தேட வேண்டியதுதான்! அந்த நுண்ணிய கோடுகளையும் நிழல்களையும் உன்னிப்பாக கவனியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.