New Update
/indian-express-tamil/media/media_files/gY0wtHqJqqOFjBmDQhp3.jpg)
Optical illusion challenge Image Credit:
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஹாலோவீன் கடையில், சூனியக்காரி எங்கே இருக்கிறாள் என்று 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி.
Optical illusion challenge Image Credit:
Optical ilusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுதான் இன்றைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான விளையாட்டு. உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த விரும்பினால், உங்களால் முடிந்தவரை விரைவில் ஆப்டிகல் இல்யூஷ்ன் விளையாட்டுகளில் விளையாடத் தொடங்குங்கள். ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதன் மூலம், புரிந்துகொள்ளுதல் மற்றும் திறமையை வளர்ப்பதற்கான உங்கள் திறனை உண்மையில் மேம்படுத்த முடியும் பலரும் கூறுகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மறைக்கப்பட்ட வார்த்தைகள், குணநலன்கள், மனப் பயிற்சிகள் மற்றும் மாயைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் சவால்களாக முன்வைக்கப்படுகின்றன.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஹாலோவீன் கடையில், சூனியக்காரி எங்கே இருக்கிறாள் என்று 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. இது உங்கள் கண்களை ஏமாற்றும் வித்தை.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
இந்த படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இருப்பது ஒரு ஹாலோவீன் கடை, ஹாலோவீன் கடையில் ஒரு சூனியக்காரி மறைந்திருக்கிறாள். அந்த சூனியக்காரியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் -கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. இது உங்கள் கண்களை ஏமாற்றும் வித்தை. இந்த வகையான ஆப்டிகல் மாயை பயிற்சிகள் கவனம், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை உள்ளிட்ட அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தும்.
அதற்குமுன், முதலில் ஹாலோவீன் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஹாலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும். ஹாலோவீன் கடை என்றால் மற்றவர்களை பயமுறுத்துவதற்கு மாறுவேடம் அணிவதற்கான முகமூடிகள் போன்றவை விற்பனை செய்யும் கடையைத் தான் ஹாலோவீன் கடை என்பார்கள்.
ஆனால், இந்த ஹாலோவீன் கடையில் ஒரு சூனியக்காரி மறைந்திருக்கிறாள், அவளை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உள்ள இந்த ஹாலோவீன் கடையில் மறைந்திருக்கும் ஒரு சூனியக்காரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் படத்தில் உள்ள இந்த ஹாலோவீன் கடையில் மறைந்திருக்கும் சூனியக்காரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் சூனியக்காரி இல்லை என்று கூறுகிறார்கள். கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ளவர்களின் முகத்தை கவனமாக பாருங்கள் சூனியக்காரி வித்தியாசமாக தோற்றமளிப்பது கண்ணில் படலாம்.
இப்போது படத்தில் சூனியக்காரியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, படத்தில் உள்ள இந்த ஹாலோவீன் கடையில் மறைந்திருக்கும் சூனியக்காரி எங்கே இருக்கிறாள் என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.