Optical illusion game: இணையமும் சமூக ஊடகங்களும் ஆப்டிகல் இல்யூஷன்களால் நிரம்பி வழிகிறது. நீங்கள் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்வதில் உங்கள் நேரத்தை செலவிட விரும்புகிறீர்களா? அப்படியென்றால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சிங்கத்தின் ஓவியத்தில் மறைந்திருக்கும் எலிகளை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அப்பா டக்கர். ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் சவால் விட்டது சரி, அது என்னங்க அப்பா டக்கர் என்று கேட்கிறீர்களா? யாரும் செய்ய முடியாத, மிகவும் அறிவுப் பூர்வமானாவர்களைப் பார்த்து ‘நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என்று கேட்பதைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். அது என்ன அப்பா டக்கர், இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது என்றால் தெரிந்துகொளுங்கள்.
காந்தியின் ஆசிரமத்தில் இருந்தவர்தான் தக்கர் பாபா, பொது அறிவு சம்பந்தமாக காந்தியிடம் சந்தேகங்களைக் கேட்டு வரும் கேள்விகளுக்கு தக்கர் பாபாதான் பதில் அளிப்பார். தக்கர் பாபாவின் அறிவு ஞானம் மக்கள் மத்தியில் பிரபலமானது. தக்கர் பாபா என்றால் தமிழில் அப்பா தக்கர் என்று சொல்லலாம். அதுவே மருவி அப்பா டக்கர் என்றானது என்று கூறுகிறார்கள். இப்படித்தான் அப்பா டக்கர் என்ற வார்த்தை மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வந்தது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagran தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கர்ஜிக்கும் சிங்கத்தில் 2 எலிகள் மறைந்திருக்கிறது. அந்த எலிகள் எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் அப்பா டக்கர். ஏனென்றால், இது மிகவும் கூர்மையான பார்வையுடன் மிகவும் அறிவுப் பூர்வமாக யோசித்தி கண்டுபிடிக்க வேண்டிய சவால். நீங்கள் அப்பா டக்கர் என்பதை காட்டுங்கள்.
இந்நேரம் நீங்கள் சிங்கத்தில் மறைந்திருக்கும் எலிகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் அப்பா டக்கர்தான். ஆனால், எலிகளைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு எலிகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.