Oru poonga vanam Pudhu Manam Monkeys swimming in pool went viral video : 1988ம் ஆண்டு இயக்குநர் மணி ரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு, கார்த்திக், விஜயகுமார், அமலா, நிரோஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் அக்னி நட்சத்திரம். இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஒரு மனிதரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உருவாக்கப்பட்டது அந்த படம்.
Advertisment
இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்க, இந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ரீச் ஆனது. நின்னுக்கோரி வர்ணம், ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா, ஒரு பூங்கா வனம் புது மணம் போன்ற பாடல்கள் எவர் க்ரீன் வகையறாக்கள். இந்த படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார் எம்.ஆர். ராதாவின் சினிமா வாரிசுகளில் ஒருவரான நிரோஷா. இவருக்கும் கார்த்திக்கும் வரும் பாடல் தான் பூங்காவனம் புதுமனம். காதலை அழகியல் காட்சிகளோடு வெளிப்படுத்திய பாடல் அது. அதில் வரும் நீச்சல் குள காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒன்று.
தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் பலரும் வீடுகளில் இருந்து வெளியே வருவதில்லை. இந்த நேரத்தில் வனவிலங்குகள் எல்லாம், ஒரு காலத்தில் தங்களின் எல்லைகளாக இருந்த இடங்களை நோக்கி படையெடுத்து வருகிறது. சமீபத்தில் குடியிருப்பு அல்லது நட்சத்திர ஹோட்டல் ஏதோ ஒன்றுக்குள் புகுந்த குரங்குகள் அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் ஹாயாக குளித்து வருகின்றன. இந்த காட்சியை, அந்த பாடலுடன் இணைத்து வெளியான காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியை மணிரத்தினம் பார்த்தாலோ, அல்லது அப்படத்தின் குழுவினர் யார் பார்த்தாலும் ரொம்ப வருத்தப்படுவாங்கப்பா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news