ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற கார் மீது திடீரென வழிகாட்டி பலகை விழுந்தது பெரும் விபத்து ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட கார் விபத்தில் 53 வயது பெண் ஒருவர் உயிர் பிழைத்தது அதிசயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும் விபத்தில் காயங்களுடன் அப்பெண் தப்பித்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியா கார் விபத்து
மெல்போனில் உள்ள டல்லாமெரைன் ஹைவே சாலையில், பெண் ஒருவர் ஓட்டி சென்றிருந்த கார் மீது திடீரென வழிகாட்டி பலகை மேலிருந்து சரிந்து விழுந்தது. கண் சிமிட்டும் நொடியில், காரின் மேலே விழுந்த அந்த பலகையால் அடையாளம் தெரியாத அளவிற்கு கார் நொறுங்கியது.
January 2019WATCH: This incredible dash cam vision shows the heart-stopping moment a freeway road sign came loose, crushing the car below. #9News
Full story: https://t.co/7cSRwztboH pic.twitter.com/SnfCqHUZto
— Nine News Melbourne (@9NewsMelb)
WATCH: This incredible dash cam vision shows the heart-stopping moment a freeway road sign came loose, crushing the car below. #9News
— Nine News Melbourne (@9NewsMelb) January 9, 2019
Full story: https://t.co/7cSRwztboH pic.twitter.com/SnfCqHUZto
சில நொடிகளிலேயே அந்த இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி அளித்தனர். காரின் உள்ளே இருந்த ஏர் பேக்கின் பலனால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கழுத்து மற்றும் கைகளில் முறிவு ஏற்பட்டு மெல்போனின் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
January 2019Authorities are urgently trying to work out how an overhead freeway sign fell, crushing a passing driver's car in Melbourne. Amazingly, she was not badly hurt and was taken to hospital in a stable condition suffering neck injuries. #Melbourne #7News pic.twitter.com/TBSh2SMMyg
— 7 News Sydney (@7NewsSydney)
Authorities are urgently trying to work out how an overhead freeway sign fell, crushing a passing driver's car in Melbourne. Amazingly, she was not badly hurt and was taken to hospital in a stable condition suffering neck injuries. #Melbourne #7News pic.twitter.com/TBSh2SMMyg
— 7NEWS Sydney (@7NewsSydney) January 9, 2019
செவ்வாய் கிழமை மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலிருந்து கீழே விழுந்த பலகை காற்றின் வேகத்தால் ஆடாமல் கூட இருந்தது, ஆனால் அப்படியிருக்க எப்படி விழுந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.