Advertisment

‘மார்கழியில் மக்களிசை’ குத்தாட்டம் போட்ட இயக்குனர் பா. இரஞ்சித்; வைரல் வீடியோ

Pa Ranjith dance video: ஒசூரில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் இயக்குனர் பா. ரஞ்சித் மேடையில் குத்தாட்டம் போட்ட விடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Pa Ranjith dance

Pa Ranjith dance video

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pa Ranjith dance video: ஒசூரில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் இயக்குனர் பா. ரஞ்சித் மேடையில் குத்தாட்டம் போட்ட விடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குனர் பா. இரஞ்சித் வருகைகுப் பிறகு, தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தலித் அரசியல் வசனங்களும், சாதி எதிர்ப்பு காட்சிகளும் தலித் பண்பாடும், தலித் கலை அரசியலும் சினிமாவில் புது வேகத்துடன் இடம்பெற்று வருகிறது. 

இயக்குனர் பா. இரஞ்சித் படம் இயக்குவதோடு மட்டுமில்லாமல், தலித் அரசியல் பேசும் படங்களை தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல், வானம் கலைத் திருவிழா, மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 

மார்கழி மாதம் என்றாலே சென்னையில் சபாக்களில் கர்நாடக இசை மட்டுமே இடம்பெற்று வரும் நிலையில், மார்கழியில் மக்களிசை என்று மக்கள் இசையை இடம்பெறச் செய்து பா. இரஞ்சித் கவனத்தை ஈர்த்தார். 

அந்த வகையில், மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சென்னையில் மட்டுமில்லாமல், சென்னைக்கு வெளியேயும் நடத்தத் தொடங்கினார். அந்த வகையில், ஒசூரில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

https://twitter.com/search?q=pa%20ranjith&src=typed_query&f=live

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் பா. இரஞ்சித், நிகழ்ச்சியின் கொண்டாட்டமான தருணத்தில் மேடையில், குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மேடையில், இயக்குனர் பா. இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன், கானா பாடகர்கள் உடன் மாஸாக டான்ஸ் ஆடும் வீடியோவை அவருடைய ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment