New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/17/dogs-chase-lioness-2025-07-17-08-19-45.jpg)
இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஒரு வைரல் வீடியோவில், குறுகிய சந்தில் நிதானமாக நடந்து வந்த ஒரு சிங்கத்தை, ஒன்பது தெரு நாய்கள் விரட்டுகின்றன. ஆனால், சில நொடிகளிலேயே தங்களது தவறை உணர்ந்து அவை வந்த வழியே திரும்பி ஓடுகின்றன.
இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஒரு வைரல் வீடியோவில், குறுகிய சந்தில் நிதானமாக நடந்து வந்த ஒரு சிங்கத்தை, ஒன்பது தெரு நாய்கள் விரட்டுகின்றன. ஆனால், சில நொடிகளிலேயே தங்களது தவறை உணர்ந்து அவை வந்த வழியே திரும்பி ஓடுகின்றன.
'பாகம் பாக்' திரைப்படத்தில் அக்ஷய் குமாரின் கதாபாத்திரம் ஒரு கும்பலால் துரத்தப்பட்டு, பிறகு ஒரு நாயைப் பார்த்ததும் அந்தக் கும்பலே எதிர் திசையில் ஓடும் நகைச்சுவையான காட்சியை நினைவிருக்கிறதா? அதேபோன்ற ஒரு காட்சி சமீபத்தில் நிஜ வாழ்க்கையில் அரங்கேறி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஹந்த் ஷெல்பி (@Arhantt_pvt) என்பவர் பகிர்ந்த, பின்னர் 'கர் கே கலேஷ்' என்ற மீம் பக்கம் மீண்டும் வெளியிட்ட ஒரு வைரல் வீடியோவில், இந்தியாவில் எங்கோ ஒரு குறுகிய சந்தில் ஒரு சிங்கம் நடந்து வருகிறது. அதன் சரியான இடம் இன்னும் தெரியவில்லை. அப்போது, 9 தெரு நாய்கள் , அந்தப் பெரிய பூனையை சாதாரணமாக ஒரு பூனை என்று தவறாக நினைத்து, நம்பிக்கையுடன் அதை நோக்கிப் பாய்கின்றன. ஆனால், சில நொடிகளிலேயே உண்மை புரிய, அவை அனைத்தும் அவசரமாகப் பின்வாங்கித் தெறித்து ஒடுகின்றன.
திரையில் தோன்றும் வாசகம், நாய்க் கூட்டத்தை "டாகேஷ் பாய் கும்பல்" என்று அறிமுகப்படுத்துகிறது.
வீடியோவைப் பாருங்கள்:
They thought it's just a CAT😭
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 15, 2025
pic.twitter.com/EO6P9Z4ODi
வீடியோவுடன் வந்த தலைப்பு, "அது சும்மா பூனைன்னு நெனச்சாங்க" என்று நகைச்சுவையாகச் சொல்கிறது. இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் பலரை சிரிக்க வைத்துள்ளது.
ஒரு பார்வையாளர் வீடியோவுக்குப் பதிலளிக்கும் விதமாக, "அதனால்தான் சில சமயங்களில் அறியாமை ஒரு ஆனந்தம் என்கிறார்கள்!" என்று கூறினார். மற்றொரு பயனர், காட்சியை உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகு, "நான் எண்ணிப் பார்த்தேன். 9 நாய்கள் உள்ளே போயின, 8 நாய்கள் வெளியே வந்தன" என்று எழுதினார். மூன்றாவது எக்ஸ் பயனர், "ராஜ் பால் யாதவ் இடம்பெற்ற அந்த பாகம் பாக் காட்சி" என்று கருத்து தெரிவித்தார்.
"சரி, அவை முழுமையாகத் தவறாக இருக்கவில்லை. அது ஒரு பூனைதான் - அவை எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய பூனை" என்று மற்றொரு பயனர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.