கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த பாங்ரா நடனம் ஆடிய பாகிஸ்தான் டாக்டர்கள்; வைரல் வீடியோ
உலகம் முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அன்பு காட்ட கிரியேட்டிவான வழிகளில் செயல்பட்டு வருகின்றனர். அப்படி பாகிஸ்தான் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த பாங்ரா நடனம் ஆடியுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அன்பு காட்ட கிரியேட்டிவான வழிகளில் செயல்பட்டு வருகின்றனர். அப்படி பாகிஸ்தான் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த பாங்ரா நடனம் ஆடியுள்ளனர்.
Pakistan Doctors dances, pakisan doctors dancing, பாகிஸ்தான் மருத்துவர்கள் நடனம், pakistan dance bhangra, கொரோனா வார்டில் பாகிஸ்தான் மருத்துவர்கள் பாங்ரா நடனம், Doctors in Pakistan dance, doctors bhangra to cheer covid-19 patients, வைரல் வீடியோ, கொரோனா வைரஸ், doctors dance bhangra at coronavirus ward, pakistan doctors bhangra viral video, viral video, corona virus viral video, latest corona virus news, tamil videos, tamil video news
கொரோனா வைரஸ் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க பாகிஸ்தான் டாக்டர்கள் பாங்ரா நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
உலகம் முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அன்பு காட்ட கிரியேட்டிவான வழிகளில் செயல்பட்டு வருகின்றனர். அப்படி பாகிஸ்தான் மருத்துவர்கள் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க புகழ் பெற்ற ‘சித்த சோலா’ என்ற பாடலுக்கு பாங்ரா நடனம் ஆகியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கவச உடையுடன் கொரோனா வார்டில் நோயாளிகளை உற்சாகப்படுத்தி டோல் இசைக்கு நடனமாடுகிறார்கள். நோயாளிகளும் மருத்துவர்களுடன் சேர்ந்து கைகளை அசைக்கின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பிரபலங்கள் பலர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போது பாஜக எம்.பி.-யாகவும் இருக்கும் கௌதம் கம்பீர் உள்பட பலர், பாகிஸ்தான் டாக்டர்கள் நடனம் ஆடும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நேற்று (15.04.2020) புதிதாக 272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6000-ஐ நோக்கி சென்று கொண்டுள்ளது. பாகிஸ்தானில், இதுவரை 107 பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1,446 பேர் கோரொனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் அச்சத்தாலும் தனிமையாலும் மிகுந்த மன அழுத்தத்துக்குள்ளாகிறார்கள். இது போன்ற நேரத்தில் அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க அவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை அளிக்க வேண்டியது அவசியம். பாகிஸ்தான் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க பாங்ரா டான்ஸ் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தியிருப்பது பலரும் பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"