பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பாப்கார்ன் வியாபாரி தனி ஒருவனாக வீட்டிலேயே செய்த விமானத்திற்கு பாகிஸ்தான் விமானப்படை மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் தனது வாழ்நாள் கனவை தனி ஒருவனாக நின்று ஜெயித்து காட்டியுள்ளார் முகமது பயாஸ். பாகிஸ்தானில் தபூர் பகுதியில் வசிக்கும் இவர்,கடந்த சில வருடங்களாக பாப்கார்ன் விற்று வியாபாரம் செய்து வருகிறார்.
சிறு வயது முதலே விமானப் படையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஆர்வத்துடனும் இருந்துள்ளார். இதனையடுத்து பணி நேரம் போக, வீட்டில் இருக்கும் போது துரிதமாக செயல்பட்டு விமானம் ஒன்றை தயார் செய்துள்ளார்.
இந்த விமானத்தை தயாரிப்பதற்கு சில லட்சங்கள் செலவாகும் என்பதால் பயாஸ் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று 50 ஆயிரம் திரட்டியுள்ளார். கூடுதால வங்கியில் கடனும் வாங்கியுள்ளார். அதுபோக ரோடு வெட்டும் இயந்திரத்திலிருந்து எஞ்சின், ஆட்டோவின் பாகங்கள் என கிடைக்கும் பொருட்களையெல்லாம் சேகரித்து சொந்தமாக வீட்டிலேயே விமானத்தை செய்து முடித்தார்.
இவர் விமானம் உருவாக்கி வருகிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் விமானப்படையினர் அடிக்கடி அவர் வசிக்கும் வீட்டிற்கு வந்து இது குறித்து விசாரித்து வந்துள்ளனர். மேலும் அவரது பணியினை கண்காணிப்பது மட்டுமின்றி விளக்கம் கேட்டும் வந்துள்ளனர். இறுதியில் விமானத்தை சோதனை ஓட்டமும் நடத்தி முடித்தார்.
போலீசாரின் அனுமதி இல்லமால் விமானத்தில் பறந்து சோதனை செய்ததால் பயாஸ் கைது செய்ய போலீசார் ரூ.3000 அபராதமும் வித்திதனர். பின்பு அவர் முறையாக அனுமதி பெற்றார்.
பயாஸ் இந்த விமானத்தை உருவாக்க ஆன்லைனில் வீடியோக்களை பார்த்துள்ளார். இந்த விமானத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விமானப்படையினர் அவரது திறமையை பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இந்த விமானத்தை அருகில் இருக்கும் கிராமத்தினரும், கல்வி பயிலும் மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர். பயாஸின் விமான தயாரிப்பு அனைவருக்கும் ஊக்கத்தினையும், தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.