Advertisment

பழனி முருகன் கோவில் வழக்கு: ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருப்பதியைப் போல பக்தர்களை அழைத்துச் செல்ல பழனி கிரிவல வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai HC

பழனி முருகன் கோவில் வழக்கு: ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் ஏன் முற்றிலும் வணிக நிறுவனங்களை தடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி ஒன்றை முன் வைத்துள்ளனர். பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பழனி திருத்தொண்ட திருச்சபை நிர்வாகி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வருடா வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகிறார்கள். பழனி கோவில் கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அந்த ஆக்கிரமிப்புகள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே, பழனி கோவில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழனி கோவில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் கோவில் கிரிவல வீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் 9 இடங்களில் இரும்பு தூண்கள் மற்றும் தள்ளும் வகையான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பணியானது இன்னும் 2 வாரங்களில் முடிவடையும் எனவும் அதிகாரிகளின் வாகனங்கள் கொடைக்கானல் சாலை வழியாக கோவிலுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், முறையாக சர்வே செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத அளவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு நீண்ட தீர்வு காணும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும். 

மேலும், திருப்பதியைப் போல பக்தர்களை அழைத்துச் செல்ல பழனி முருகன் கோவில் கிரிவல வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் எந்த விதமான தனியார் வாகனங்களும் கிரிவல வீதிக்குள் வர அனுமதிக்க கூடாது என்றும் கிரிவலம் வீதிகளில் உரிய முறையில் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

மேலும், இனிவரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படாத அளவிற்கு சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் சிறிய ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வகையில் காவல்துறை ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு வைத்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment