சிசிடிவி காட்சி வைரல் : திருட்டு பைக்கை திருப்பிக் கொடுத்த மனிதர்

தான் டூ வீலர் பைக்கைத்  திருடிய சிசிடிவி காட்சி சமூக வளைத் தளங்களில்  மிகவும் பிரபலமாக பரவி வந்த ஒரு காரணத்தால் எடுத்த வண்டியை அதே இடத்தில் விட்டுச் சென்று இருக்கிறார்.

By: Updated: December 5, 2019, 08:06:57 PM

தான் டூ வீலர் பைக்கைத்  திருடிய சிசிடிவி காட்சி சமூக வளைத் தளங்களில்  மிகவும் பிரபலமாக பரவி வந்த ஒரு காரணாத்தால் எடுத்த வண்டியை அதே இடத்தில் விட்டு சென்று இருக்கிறார். சென்னையை அடுத்த பள்ளிகரனையில்  இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

காவல்துறை பதிவு செய்த  முதல் தகவல் அறிக்கையின் படி, அண்ணா நகரை சேர்ந்த கார்த்திக் சந்தோஷ், நடனம் பயிற்சியாளராக  இருப்பவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிகரனையில் உள்ள தனது நடன பயிற்சி மையத்தில் வகுப்புகளை முடித்து விட்டு இரவு 11 மணி போல் வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார். பிறகு, தான் வெளியில் நிருத்தி வைத்திருந்த டூ வீலர் காணவில்லை என்று அதிர்சியடைந்த கார்த்திக் பக்கத்து வீட்டில் இருக்கும் சிசிடிவியில் பதிவு செய்திருக்கும்  காட்சியை சோதனை செய்துள்ளார் .

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

சென்னையில் மழை நீடிக்குமா? – தமிழ் வீடியோ 

அந்த சிசிடிவி காட்சியில், ஒருவர் குறைந்தது அரை மணி நேரமாவது , டூ வீலரை நோட்டம் விட்டு பின்பு திருடி சென்றது தெரிய வந்தது.

பின்பு, கார்த்திக் பள்ளிகரணை உள்ள காவல் நிலையத்தில் இந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக சமர்பித்து உரிய புகார் மனு ஒன்றையும் அளித்தார். மேலும், இந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டார். இந்த சிசிடிவி வீடியோ, செய்தி சேனல்களிலும் காட்சியாக  வந்தது .

இந்நிலையில், கடந்த வியாழன் கிழமை கார்த்திக் மீண்டும் தனது நடன பயிற்சி மையத்திற்கு சென்ற போது, காணாமல் போன அதே வாகனம், அதே இடத்தில் நின்று இருந்தது. அதிர்ச்சியோடு புன்னகைத்த கார்த்திக், காவல்துறைக்கு விரைவாக சென்று நடந்ததை விளக்கினார்.

பைக்கை எடுத்த நபர், காவல் துறையினர் பயத்தால் அல்ல, சோசியல் மீடியாவிற்கு வெட்கப்பட்டு அந்த பைக்கை மீண்டும்  வைத்து விட்டு சென்றிருக்கிறார் என்ற நகைச்சுவை கமண்ட்ஸ்ம் வந்த வண்ணம் இருக்கின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pallikaranai man return theft bike incident as cctv video wents viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X