உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் புகுந்து பேப்பரை ஆடு கவ்விக்கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டிடம் இருந்த பேப்பரை பிடுங்க அதிகாரி ஒருவர், விரட்டி செல்லும் காணொலி சமூக வலைதளத்தில் பரவி வியப்பை ஏற்படுத்தியது.
கான்பூர் மாவட்டத்திலுள்ள சௌபேபூர் பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலத்திற்கு வெளியே ஆடு ஒன்று வாயில் பேப்பருடன் நின்றுகொண்டிருந்துள்ளது. இதனை பார்க்க ஊழியர் ஒருவர், வேகமாக சென்று ஆட்டிடம் இருந்து பேப்பரை பிடுங்க ஓடினார். ஆனால் அதற்குள் ஆடு வேகமாக ஓடிச் சென்றுவிட்டது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஆடு ஒன்று பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை வாயில் கவ்வி சென்றதாக தகவல் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இச்சம்பவம் குறித்து சௌபேபூ தொகுதி வளர்ச்சி அலுவலர் மனுலால் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். அதில், பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஆடு கவ்வி செல்லவில்லை. அருகில் உள்ள கேன்டினுக்கு வெளியே கிடந்த பேப்பரைதான் எடுத்துசென்றது என்றார்.
முக்கிய ஆவணங்களை ஆடு எடுத்துசெல்லவில்லை என அதிகாரிகள் கூறினாலும், ஆட்டை விடாமல் அதிகாரி விரட்டி சென்றது கேள்வியை எழுப்புகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil