New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-10.jpg)
ரயிலில் பாம்பு
பயந்துக் கொண்டு பயணிகள் அனைவரும் ரயிலில் பயணித்த வீடியோ
ரயிலில் பாம்பு
ரயிலில் பாம்பு புகுந்தால், பயணிகள் பயத்தில் நடுங்கிக் கொண்ட எலட்ரிக் ரயிலில் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களில் மும்பையும் ஒன்று. அதிலும், அலுவலகம் செல்லும் மக்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என மும்பை புறநகர் ரயில் நிலயங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளிக்கொண்டு ரயில்களில் பயணம் மேற்கொள்வார்கள்.
இதே போல் நேற்று காலை 8.33 மணிக்கு தித்வாலா பகுதியில் இருந்து சத்ரபதி சிவாஜி டெர்மினல் பகுதிக்குப் புறநகர் ரயில் ஒன்று புறப்பட்டது. ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி, கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியவாறே பயணித்தனர்.ஏற்கனவே ரயிலுக்குள் கூட்டம் கடுமையாக இருந்ததால், ஒவ்வொரு பயணியும் உரசிக்கொண்டும், இடித்துக்கொண்டும் பயணித்து வந்தன.
அந்த கூட்டத்தில் ரயிலில் உள்ள மின் விசிறியின் மேல்பகுதியில் ஒரு பாம்பு ஒன்று இருந்துள்ளது. முதலில் அதை கவனிக்காத பயணிகள் திடீரென பாம்பை பார்த்தவுடன் அலறினர். அந்த பாம்பு மெதுவாக பயணிகள் கை பிடிக்கும் கைப்பிடிகள் மீது நகரத்தொடங்கியது. பயணிகள் யாராலும் ரயிலை நிறுத்தமுடியவில்லை, இறங்கவும் முடியவில்லை.
பாம்பு நெளிந்து ஊர்வதைப் பயணிகள் கண்டனர். பாம்பை வெறியேற்ற முயன்றபோது, அது அவர்களை நோக்கிப் பாய்ந்தது. இதனால், பதற்றத்தில் பயணிகள் அலறத் தொடங்கினர். அதற்குள், ரயில் தானே ரயில்நிலையத்தை அடைந்துவிட்டது. ரயில் நின்றவுடன், பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இதையறிந்த ரயில்வே போலீஸார், தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள், மின்விசிறிக்குள் இருந்த பச்சைப் பாம்பை பத்திரமாகப் பிடித்துச்சென்றனர்.
ரயிலில் பயணித்துக் கொண்டே மொபைல் திருட்டு!
அதன்பிறகே, பயணிகள் நிம்மதியாகப் பயணத்தை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாகச் சென்றன.பாம்புக்கு பயந்துக் கொண்டு பயணிகள் அனைவரும் ரயிலில் பயணித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.