இண்டிகோவின் விமானியாக இருப்பவர் பிரதீப் கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. வழக்கம் போல் பயணிகளுக்கு தமிழில் அறிவிப்பு வழங்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்தியிலும் அறிவிப்பை வழங்க வேண்டும் என கூறினார்.
பயணியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ,பைலட் பிரதீப் கிருஷ்ணன் இந்தியிலும் அறிப்பை வழங்கினார்.
“நமஸ்கார், மேரா நாம் பிரதீப் கிருஷ்ணன் ஹை. மேரா பர்ஸ்ட் ஆபிசர் கா நாம் பாலா ஹை. ஹமாரா லீட் கா நாம் பிரியங்கா ஹை. ஹம் ஆஜ் சென்னை சே மும்பை ஜாயேங்கே, 35,000 மே உதயேங்கே, புரா கி தூரி 1,500 கிமீ ஹை, புரா கா சமய் ஏக் கண்டா ஏக் காண்டே டீஸ் மினிட் ஹை, ஜானே கே டர்புலன்ஸ் ஹோகா, ஹம் சீட் பெல்ட் தாலேங்கே, மெயின் பி தாலேங்கே. தன்யாவத்
அந்த வீடியோ
வணக்கம், என் பெயர் பிரதீப் கிருஷ்ணன். எனது முதல் அதிகாரி பாலா. எங்கள் தலைவரின் பெயர் பிரியங்கா. நாங்கள் சென்னையில் இருந்து மும்பைக்கு 35,000 அடி உயரத்தில் 1,500 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களில் கடக்கிறோம்.சீட் பெல்ட் அணிவோம். நானும் அணிவேன் .நன்றி, என்றார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் பிரதீப் கிருஷ்ணனை வாழ்த்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“