Pathinamthitta district collector dances : பத்தினம்திட்டாவில் அமைந்திருக்கும் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் உரையாட சென்ற அம்மாவட்ட ஆட்சியர் அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவருபவர் எஸ். திவ்யா. எம்.ஜி கல்லூரியின் யூத் திருவிழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். அப்போது அங்கு மாணவிகள் நடனம் ஒன்றை ஆடியுள்ளனர். அதைப் பார்த்த ஆட்சியர் திடீரென்று மாணவிகளுடன் இறங்கி நடனமாடியுள்ளார்.
நிறைய பேர் நடனமாட ஏன் தயங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது, நான் தயங்க என்ன இருக்கிறது என்று கூறி களத்தில் இறங்கியுள்ளார் இந்த மாவட்ட ஆட்சியர். பாலிவுட் படமான ராம்லீலாவில் இடம் பெற்றிருக்கும் டோலூ பாஜீ பாடலுக்கு நடனமாடிய அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”