யானைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகம் அடைவார்கள். நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானை மிகவும் நுண்ணுணர்வு மிக்க விலங்கு. யானைப் பாகனுக்கு கட்டுப்பட்டு நடக்கும். யானைகளை வனத்துறையினர் தங்கள் ரோந்துப் பணிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில், மழைக் காலத்தில் வனத்தைச் சுற்றி மழை வெள்ள நீரால் மூழ்கியுள்ள நிலையில், தேராய் காடுகளில் வனத்துறையினர் யானை மீது ஏறி ரோந்து செல்லும் சவாலான பணியை மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேராய் (Terai) காடுகள் என்பது சதுப்பு நிலங்கள், சவன்னாக்கள் மற்றும் இமயமலையின் வெளிப்புற அடிவாரத்தின் தெற்கே, சிவாலிக் மலைகள் மற்றும் கங்கையின் இந்தோ-கங்கை சமவெளி, பிரம்மபுத்திரா மற்றும் அவற்றின் துணை நதிகளின் வடக்கே அமைந்துள்ள காடுகள் அமைதுள்ள இடங்கள் ஆகும்.
Patrolling in Terai jungles is quite challenging during monsoons.
— Ramesh Pandey (@rameshpandeyifs) July 4, 2024
Patrol elephants help in accessing inundated areas and tall wet grasslands in this tough time. Hats off to our green guards.
VC: Sujoy Banerjee pic.twitter.com/k4JntdtUKo
இந்த தேராய் காடுகளில் மழைக் காலங்களில் வனத்துறையினர் ரோந்து செல்வது ஒரு சவாலனா பணி. அதிலும், காடுகளிலும் காட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி இருக்கும்போது, வனத்துறையினர் யானைகள் மீது ஏறி மூட்டை முடிச்சுகளுடன் ரோந்து செல்வது என்பது மிகவும் சவாலானது. அப்படி, தேராய் காடுகளில் மழைக்காலத்தில் வனத்துறையினர் யானை மீது ஏறி ரோந்து செல்கிற வீடியோ சமூக வலைதளங்களில் பார்வையாளர்கலை ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், சுஜோய் பானர்ஜியால் பதிவு செய்யப்பட்ட மழை நீரில் வனத்துறையினர் யானை மீது ரோந்து செல்கிற வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், மழைக் காலத்தில் காடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கி இருக்க, சுற்றிலும் நாணல்கள் வளர்ந்திருக்க, பாகன்களுடன் வனத்துறையினர் யானைகள் மீது அமர்ந்து காட்டைச் சுற்றி ரோந்து செல்கிறார்கள். வனத்துறையினர் அமர்ந்திருக்கும் யானைகள் வரிசையாக ரோந்து செல்கின்றன. மழைநீரில் யானைகள் மீது அமர்ந்து காட்டில் ரோந்து செல்வது என்பது உண்மையிலேயே சவாலான பணிதான்.
இந்த வீடியோ குறித்து ரமேஷ் பாண்டே குறிப்பிடுகையில், “மழைக்காலங்களில் தேராய் காடுகளில் ரோந்து செல்வது மிகவும் சவாலானது.
இந்த கடினமான நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள் மற்றும் உயரமான ஈரமான புல்வெளிகளை அணுகுவதற்கு ரோந்து யானைகள் உதவுகின்றன. எங்கள் பசுமை காவலர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தில் மூழ்கிய காட்டுப் பகுதிகளில் வனத்துறையினர் யானை மீது ஏறி ரோந்து செல்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து எக்ஸ் பயனர் ஒருவர் குறிப்பிடுகையில், “பசுமை பாதுகாவலர்களுக்கு வணக்கங்கள்” என்று பாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.