/indian-express-tamil/media/media_files/2025/07/31/peacock-rescued-2025-07-31-20-38-35.jpg)
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபத், படுகாயமடைந்த மயிலை திறமையாக மீட்டு, தனது ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை வனத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெறும் 7 நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்று உள்ளது.
புதன்கிழமை மாலை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு காயமடைந்து கிடந்த மயிலைப் பார்த்த அப்பகுதி மக்கள், MEDI SQUAD ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபத், படுகாயமடைந்த மயிலை திறமையாக மீட்டு, தனது ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை வனத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார். மயில் மீட்கப்பட்டு, சரியாக 7 நிமிடங்களில் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, காயம் அடைந்த ஆண் மயிலுக்கு நெஞ்சுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெறும் 7 நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தார்.#viralvideopic.twitter.com/xKb4TFbLwa
— Indian Express Tamil (@IeTamil) July 31, 2025
ஓட்டுநர் பிரபத்தின் இந்த துரிதமான மற்றும் மனிதநேயமிக்க செயல், அப்பகுதி மக்கள் இடையே பாராட்டைப் பெற்றதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.