New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Cuddalore-peacock.jpeg)
கடலூர் நகர பகுதிக்கு கார் மீது அமர்ந்து வந்த மயில்
கடலூர் நகர பகுதிக்கு கார் மீது அமர்ந்து வந்த மயில்; வனத்துறையிடம் ஒப்படைப்பு
கடலூர் நகர பகுதிக்கு கார் மீது அமர்ந்து வந்த மயில்
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள சமுட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி. இவர் இன்று கடலூர் நகரப் பகுதிக்கு நகை வாங்குவதற்காக தனது காரில் கடலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்: ஆழியார் அணை பகுதியில் முகாம் போட்டுள்ள யானைகள் கூட்டம்: பயணிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தல்
கார் கடலூர் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் பணிமனை அருகே கார் வந்தபோது அவரின் காரின் மேற்கூறையில் ஏதோ சத்தம் கேட்டது. அவர் அதை கண்டு கொள்ளாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். சாலையில் இருந்த அனைவரும் அவர் காரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.. என்ன என்று காரை ஓரமாக நிறுத்தி பார்த்தபோது காரின் மேல்பகுதியில் தேசிய பறவை மயில் இருப்பதை கண்டார்.
கார் மீது அமர்ந்து கடலூரில் பவனி வந்த மயில்; வைரல் வீடியோ#Cuddalore pic.twitter.com/m1QFDileIe
— Indian Express Tamil (@IeTamil) June 12, 2023
உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் நாகராஜ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வனத்துறையில் பணிபுரியும் கடலூர் செல்லா அங்கு வந்து மயிலை கைப்பற்றி வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.