வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கூற்று, இன்னும் புரியாத புதிராக தான் உள்ளது. அப்படியிருந்தால், அவர்கள் திரைப்படங்களில் காட்டுவது போல் தான் இருப்பார்களா அல்லது வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருப்பார்களா என்ற கேள்விகளுக்கு பஞ்சம் இல்லை. வேறுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு வானில் பறப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் சமூக வலைதளத்தில் பரவுவது உண்டு. இருப்பினும், இதுவரை நம்பகதனமான தகவல் கிடைத்திடவில்லை.
இந்நிலையில், ஏலியன்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் 1500 பக்க ஆவணங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் கீழ் இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues என தலைப்பிடப்பட்ட அந்த ஆவணத்தில், அமெரிக்காவில் பல வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. அதிலும், குறிப்பாக வேற்றுகிரகவாசிகளால் ஒரு பெண் கர்ப்பமடைந்ததாகவும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை வேற்றுகிரகவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மொத்தம் ஐந்து பாலியல் சந்திப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல், கர்ப்பம், பாலியல் சம்பவங்கள், டெலிபதி, மற்றும் டெலிபோர்ட்டேஷன் போன்ற வினோதமான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளை அருகில் சந்திக்கும் போது மனிதர்களுக்குக் காயம் ஏற்படுவது மட்டுமின்றி மனிதர்களுக்குக் கதிர்வீச்சு பாதிப்பு, மூளை பிரச்சினைகள், நரம்பு பிரச்சினை ஆகியவையும் ஏற்படுகிறது. எனவே, வேற்றுகிரகவாசிகளால் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என தெரிகிறது.
இந்த 1500 பக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவன ஆவணங்களில் பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகளின் சந்திப்புகள் குறித்த விநோத நிகழ்வின் தகவல்களும் இடம்பெற்றிருந்தது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆவணக்களை டிசம்பர் 18, 2017 அன்று தி சன் செய்தி நிறுவனம் கோரிய நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 1,500 பக்க ஆவணங்களை பென்டகனிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் வேற்றுகிரகவாசிகள் உண்மையாகவே இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.