Advertisment

போரிலும் செல்லப்பிராணிகளை கைவிடாத உக்ரைனியர்கள்

உக்ரைனில் கணினி வகுப்பு பயிலும் 3 ஆம் ஆண்டு இந்திய மாணவரான ரிஷப் கௌஷிக், தனது செல்லநாய் மலிபு இல்லாமல் வெளியேற மறுப்பு தெரிவித்துவிட்டார்.

author-image
WebDesk
Feb 28, 2022 16:49 IST
போரிலும் செல்லப்பிராணிகளை கைவிடாத உக்ரைனியர்கள்

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் தொடர்ச்சியாக 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய நாள் முதலே, சுரங்கம், பதுங்குகுழி போன்ற பாதுகாப்பு பகுதிகளில் உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டது. போர் சூளும் நாட்டில், செல்லப்பிராணிகள் மீதான உக்ரைனியர்கள் பாசத்தை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

Advertisment

உக்ரைனியர்கள் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்திட, சுரங்கப்பாதையில் செல்லப்பிராணிகளுடன் தஞ்சம் அடைந்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்திருப்போம்.

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கிடையில், உக்ரைனில் கணினி வகுப்பு பயிலும் 3 ஆம் ஆண்டு இந்திய மாணவரான ரிஷப் கௌஷிக், தனது செல்லநாய் மலிபு இல்லாமல் வெளியேற மறுப்பு தெரிவித்துவிட்டார்.

பிப்ரவரி 26,2022 அன்றைய பேஸ்புக் பதிவில், டெஹ்ராடூனில் உள்ள SJA முன்னாள் மாணவர் சங்கம், தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்த போதிலும், ரிஷப் தனது நாயுடன் உக்ரைனை விட்டு வெளியேற முடியாது என்பதை தெரிவித்தனர்.

உக்ரைன் போர் தாக்குதலுக்கு மத்தியிலும்,லிவ் நகரில் பூனை உணவகத்தை மட்டும் அதன் உரிமையாளர் திறந்துவைத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து கேட்கையில், தினமும் 20 பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இதான் என் வாழ்க்கை. அவர்களை விட்டு செல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இதனை பத்திரிகையாளர் எரின் பர்னெட்

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

உக்ரைனைச் சேர்ந்த நிருபர் நோலன் பீட்டர்சன், பதுங்குகுழி பகுதிக்குள் பூனையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை, அவள் மிகவும் தைரியானவர் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

UAnimals என்கிற விலங்கு உரிமைகள் வாதிடும் குழு, பல விலங்குகளை தொடர்ச்சியாக மீட்டு காப்பாற்றிவருவதால், அது தொடர்பான அப்டேட்கள், கோரிக்கைகளை தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள், தற்போது உக்ரேனியர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அத்தியாவசிய கால்நடை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வர அனுமதிப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Russia #Ukraine #Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment