New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/leopard.jpg)
Photographer shares snap of camouflaged leopard cub, leaves netizens stunned: “சிறுத்தை குட்டியின் முகத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?” என்று ட்விட்டரில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வானிடம் கேட்டார் மோகன் தாமஸ்.
மரத்தின் மீது சிறுத்தைகள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இதில் எத்தனை சிறுத்தைகள் இருக்கின்றன என கேட்டுள்ளார் ஐ.எஃப்.எஸ் அதிகாரி.
கர்நாடகாவில் உள்ள ஒரு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரை சிந்திக்க வைத்து விட்டது.
வனவிலங்கு மற்றும் இயற்கை புகைப்படக் கலைஞரான மோகன் தாமஸ் சமீபத்தில் ஒரு தாய் சிறுத்தை மற்றும் அதனது குட்டி சிறுத்தை ஒரு மரத்தின் கிளையில் ஓய்வெடுப்பதைக் காட்டும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கபினி வனப்பகுதியில் அவரது ஒரு ஜங்கிள் சஃபாரி பயணத்திலிருந்து இந்த படம் எடுக்கப்பட்டது, என்று மோகன் கூறினார். அந்த புகைப்படத்தில் தாய் சிறுத்தை கிளை முழுவதும் அமர்ந்திருப்பது தெரிகிறது, ஆனால் குட்டி சிறுத்தை மரக்கிளைகளுக்கிடையே சற்று மறைந்து காணப்படுகிறது.
“சிறுத்தை குட்டியின் முகத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?” என்று ட்விட்டரில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வானிடம் கேட்டார் மோகன் தாமஸ்.
Can you spot a young leopard cubs face.@NikonIndia @ParveenKaswan pic.twitter.com/NPp3nBRFWs
— Mohan Thomas (@GetMohanThomas) June 25, 2021
இதுபோன்ற இயற்கையான புதிர்களைத் தம்மைப் பின்பற்றுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்பும் கஸ்வான், “எத்தனை சிறுத்தைகள்?” என்று மக்களிடம் கேட்டு அந்த ட்வீட்டை மறு ட்வீட் செய்தார்.
How many leopards ? https://t.co/lH3nnwnDhG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 25, 2021
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் எத்தனை சிறுத்தைகள் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
பிரமிக்க வைக்கும் இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக மோகன் தாமஸை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் நிறைய பேர் அதைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டதாகவும், கமெண்ட்டில் உள்ள பதில்களைப் பார்த்த பின்னரே அதைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளனார்.
உங்களால் முடிந்தால் குட்டி சிறுத்தை எங்கு இருக்கிறது என கண்டுபிடித்து கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.