New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/1-6.jpg)
மும்பை போலீஸ்
வீடியோவைப் பார்த்த மும்பை போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மும்பை போலீஸ்
புறநகர் ரயில் தொடங்கப்படியே பயணம் செய்து, மொபைல் திருட்டில் ஈடுப்பட்ட இளைஞர்களை மும்பை போலீஸ் தேடி வருகின்றனர்.
ரயிலில் தொங்கியப்படியே பயணம் செய்வது ஆபத்தான என்றும், தடையை மீறி பயணம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு பலமுறை எச்சரித்துள்ளது. இருந்த போதும் இளைஞர்கள் சிலர், ரயில் தொங்கிப்படியே பயணம் செய்வது, படிக்கட்டில் சாகசம் செய்வது என தொடர்ந்து ஆபத்தான செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றன.
அப்படியொரு சம்பவம் தான் மும்பையில் அரங்கேறியுள்ளது. அதிலும் இளைஞர்கள் ரயிலில் சாகசம் செய்துக் கொண்டே மொபைல் திருட்டில் ஈடுப்பட்டு இருப்பது மும்பை போலீசாரை திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் இளைஞர்கள் சில கூட்டமாக மும்பை எலட்ரிக் ரயிலில் செல்கின்றனர். ரயிலில் போதிய இடம் இருந்தும், இளைஞர்கள் சிலர் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு இளைஞர் ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்கு வெளிப்புறமாக தாவுகிறார்.
அப்போது ரயில்வே நடைபாதையில் சென்றுக்கொண்டிருந்த ஒருவருடைய போனை இளைஞர்களில் ஒருவர் பறிக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் மற்றொரு இளைஞர் செல்ஃபோன் மூலம் பதிவேற்று அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். செல்போனை திருடியது மட்டுமில்லாமல், மும்பை இளைஞர்கள் ஆபத்தை உணராது செய்த இந்த பயணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
#Viral Video Of boys doing #stunt in Local train btwn #GTB and #Chunabatthi Station... In btwn they #snatch the Mobile phone @rpfcrbb @Central_Railway @PiyushGoyal @bilal_motorwala @lata_MIRROR @rajtoday pic.twitter.com/vILdBekavU
— Amir khan (@AmirReport) 1 August 2018
இந்த வீடியோவைப் பார்த்த மும்பை போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், செல்ஃபோனை பறிக் கொடுத்த நபரிடம் இதுக் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.