/indian-express-tamil/media/media_files/2025/10/02/aravind-srinivas-1-2025-10-02-15-53-21.jpg)
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 2017-ம் ஆண்டு மின் பொறியியலில் இரட்டைப் பட்டங்கள் பெற்றார். Photograph: (Image Source: Wikimedia Commons)
பெர்பிளக்ஸிட்டி ஏ.ஐ (Perplexity AI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ரூ.21,190 கோடி நிகர மதிப்புடன் M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025-ல் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். இதன் மூலம், 31 வயதில் இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் என்ற பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.
"சென்னை பையன்" என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாஸ், தனது தாயின் நிறைவேறாத சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கும் கனவால் ஈர்க்கப்பட்டார்.
கல்வி மற்றும் தொழில் தொடக்கம்
இவர் 2017-ல் மின்னியல் பொறியியலில் (Electrical Engineering) இரட்டைப் பட்டங்களுடன் பட்டம் பெற்றார். கணினி அறிவியலுக்கு மாறுவதில் சவால்களை எதிர்கொண்டாலும், ஸ்ரீனிவாஸ் பைத்தான் (Python) கற்றுக் கொண்டார், காகில் (Kaggle) போட்டிகளில் சிறந்து விளங்கினார், மேலும் செயற்கை நுண்ணறிவுப் பிதாமகரான யோஷுவா பெங்கியோ (Yoshua Bengio)-வின் கீழ் பயிற்சியாளராகப் பணியாற்றிய பிறகு, யு.சி (UC) பெர்க்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) துறையில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார் என்று ஹுருன் அறிக்கை தெரிவிக்கிறது.
யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்?
2022-ல், டெனிஸ் யாரட்ஸ் (Denis Yarats), ஜானி ஹோ (Johnny Ho) மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி (Andy Konwinski) ஆகியோருடன் இணைந்து ஸ்ரீனிவாஸ் பெர்பிளக்ஸிட்டி ஏ.ஐ (Perplexity AI)-ஐ இணை நிறுவனராக நிறுவினார். இந்த ஸ்டார்ட்அப், கூகிள் தேடலுக்கு ஒரு துணிச்சலான மாற்றாக நிலைநிறுத்தப்பட்டது. இது ஏ.ஐ தேடலுடன் இணைத்து உரையாடல் பாணியிலான பதில்களையும், சரிபார்க்கப்பட்ட மேற்கோள்களையும் வழங்குகிறது.
“இந்த யோசனை வெற்றி பெற்றது - மக்கள் படிப்படியாக பாரம்பரிய இணைப்பு அடிப்படையிலான தேடலில் இருந்து பெர்பிளக்ஸிட்டி (Perplexity)-யின் தீர்வு சார்ந்த அணுகுமுறைக்கு மாறத் தொடங்கினர்” என்று ஹுருன் குறிப்பிட்டுள்ளது.
ஒரு திருப்புமுனை
மே 2025-ல் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனம், 360 மில்லியன் இந்தியப் பயனர்களுக்கு பெர்பிளக்ஸிட்டி புரோவை (Perplexity Pro) இலவசமாக வழங்குவதற்காக பெர்பிளக்ஸிட்டி உடன் கூட்டுசேர்ந்தது. இது தளத்தின் வரம்பை அதிகரித்தது, இதன் விளைவாக உலக அளவில் 30 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்கள் மற்றும் மாதம் 780 மில்லியன் தேடல்கள் பதிவாகின.
ஜூலை 2025-க்குள், பெர்பிளக்ஸிட்டி 18 பில்லியன் அமெரிக்க டாலகள் மதிப்பை எட்டியது. இது ஏ.ஐ துறையில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டதுடன், ஸ்ரீனிவாஸை உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களுக்கு இணையாக நிறுத்தியது.
நிறுவன நோக்கம்
முன்னாள் கூகிள் ஆராய்ச்சியாளரான ஸ்ரீனிவாஸ், ஒரு வெளிப்படையான, சரிபார்க்கக்கூடிய ஏ.ஐ தேடல் அனுபவத்தை உருவாக்கும் தனது இலக்கைத் தொடர, அந்த தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து வெளியேறினார். “அவர் மிகவும் வெளிப்படையான மற்றும் சரிபார்க்கக்கூடிய ஏ.ஐ இயங்கும் தேடல் அனுபவத்தை உருவாக்க விரும்பினார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஹுருன் அறிக்கையின்படி, அவர் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது வெறும் செல்வத்தைக் குறிப்பது மட்டுமல்ல. இது இந்தியாவின் சேவை சார்ந்த பொருளாதாரத்திலிருந்து ஆழமான தொழில்நுட்பம் (Deep-tech), தயாரிப்பு சார்ந்த புத்தாக்க மையமாக மாறுவதற்கான ஒரு சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.