husky turns out to be Andean fox : அட நாய் வாங்கப் போய் அது பேயா மாறுன கதைன்னு ஊருக்குள்ள சொல்லுவாங்களே, அந்த மாதிரி நாய் வாங்கி வீட்டுக்கு கூப்புட்டு வந்து வளத்து அது நரியா மாறுன கதை கேட்டுருக்கீங்களா? இல்லைன்னா இப்போ கேட்டுக்கங்க..
Advertisment
பெரு நாட்டை சேர்ந்த மரிபெல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆசை ஆசையாக நாய்க் குட்டி ஒன்றை மத்திய லிமா பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கி வந்துள்ளனர். செர்பியன் ஹஸ்கி வகை நாய் இது என்று ஒரு குட்டியை மரிபெல் தலையில் கட்டியுள்ளனர் கடைக்காரர்கள். ரன் ரன் என்று அந்த குட்டிக்கு பெயர் வைத்து ஆசையாக வளர்த்து வந்துள்ளனர்.
ஆனால் நாய் குட்டி பெரிதாக பெரிதாக அதன் செயல்பாடுகளில் அதிக மாற்றம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் வீட்டில் உள்ள கோழிகள் வாத்துகளை வேட்டையாடி தின்றுள்ளது. அதிர்ச்சி அடைந்த மரிபெல் குடும்பத்தினருக்கு பிறகு தான் தெரிந்துள்ளது அது செர்பியன் ஹஸ்கி அல்ல, அந்தீன் நரி என்று.
கோழி, வாத்து பத்தாது என்று இறுதியில் பக்கத்து வீட்டில் வளர்த்து வந்த பன்றிகளை வேட்டையாடவும் உஷார் ஆகியுள்ளனர் மரிபெல் குடும்பத்தினர். இது குறித்து பெருவின் வனத்துறை சேவை அமைப்பு கூறுகையில் அமேசான் காடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக விலங்குகளை பிடித்து வந்து லிமா பகுதியில் விற்றுவிடுகின்றனர் என்று கூறியுள்ளனர். வெறும் 13 டாலர்களுக்கு இந்த நாய் (நரியை) வாங்கி வந்து, பெயர் வைத்து, நாய்க்கு வழங்கும் உணவெல்லாம் கொடுத்துள்ளனர். மிகவும் சிறியவனாக இருகும் போது நாய் போன்றே குரைத்துள்ளது என்றும் கூறுகிறார் மரிபெல். நரி வாங்கப்பட்டு 6 மாதங்கள் கழித்து, வனத்துறையினர் அந்த நரியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர். தற்போது மிருகக்காட்சி சாலையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.