ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர்... தண்டவாளத்தில் விழுந்த நாய்; உடனடியாக உதவிய ரயில்வே அதிகாரிகள்: வைரல் வீடியோ

Dog viral video: ஜான்சி ரயில் நிலையத்தில் தனது கோல்டன் ரெட்ரீவர் செல்ல நாயுடன் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, நாய் ரயிலின் அடியில் விழுந்த ஒரு துயரமான வீடியோ வைரலாகி வருகிறது. நாய்க்கு என்ன ஆனது?

Dog viral video: ஜான்சி ரயில் நிலையத்தில் தனது கோல்டன் ரெட்ரீவர் செல்ல நாயுடன் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, நாய் ரயிலின் அடியில் விழுந்த ஒரு துயரமான வீடியோ வைரலாகி வருகிறது. நாய்க்கு என்ன ஆனது?

author-image
WebDesk
New Update
dog viral video

ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் அந்த குடும்பத்தினர் நாயுடன் பயணித்துக் கொண்டிருந்தனர்.

Dog spills through train platform viral video: உத்தரப் பிரதேசம் மாநிலம், ஜான்சி ரயில் நிலையத்தில் தனது கோல்டன் ரெட்ரீவர் செல்ல நாயுடன் ஒருவர் ஓடும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது, நாய் ரயிலின் அடியில் விழுந்த ஒரு துயரமான வீடியோ வைரலாகி வருகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

உரிமையாளர் ஓடும் ரயிலில் நாயுடன் ஏற முயலும்போது பயந்துபோன நாய் தனது உரிமையாளர் ரயிலுக்குள் இழுக்க முயற்சிப்பதை எதிர்க்கிறது. நிலை தடுமாறிய நாய் ஓடும் ரயிலின் அடியில் வழுக்கி விழுகிறது. இந்த வீடியோவைப் பாப்பவர்கள் பலரையும் பதற வைத்துள்ளது.

Advertisment
Advertisements

ஜான்சி ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஒரு நபர், ஓடும் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றில் கம்பியைப் பிடித்துக்கொண்டு நாயுடன் ஏறுவதற்கு, தனது செல்ல நாயை இழுக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்வதிலிருந்து வீடியோ தொடங்குகிறது. நாய் ஓடி ரயிலில் ஏறுவதற்குப் பதிலாக, பின்னால் எழுக்கிறது. இதனால் அந்த நபர், அந்த நாயின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை இழுக்கிறார். ஒரு கட்டத்தில், கயிறு கழன்று நாய் சமநிலை இழந்து, ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளி வழியாக தண்டவாளத்தில் விழுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த யாரும் நாய்க்கு என்ன ஆனதோ என்று பதறிப்போகிறார்கள். 

அப்போது ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் இருந்த நபர்கள் நாய் உயிர் பிழைத்ததா என்று பார்க்க பிளாட்பாரத்தின் விளிம்பை எட்டிப் பார்க்கின்றனர். ஆனால், அந்த வீடியோ அத்துடன் முடிந்து விடுவதால் நாய்க்கு என்ன ஆனதோ என்று பலரும் தவித்துப் போய்விடுகிறார்கள்.

இந்நிலையில் ஜான்சி பிரிவின் மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ் குமார் சிங், indianexpress.com இடம் பிரத்தியேகமாக கூறுகையில், இந்த சம்பவத்தில் இருந்து நாய் தப்பியதாகவும், அதன் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினார். ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், அந்த நபர் ஜான்சி நிலையத்தில் நாயுடன் இறங்கியதாகவும் சிங் கூறினார். ரயில் பிளாட்பாரத்தில் இருந்து நகர்வதைக் கண்டு பீதியடைந்த நபர் நாயுடன் ரயிலில் ஏற முயன்றபோது விபத்து ஏற்பட்டது. யாரோ ஒருவர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்த முடிந்தது, அது நாயைக் காப்பாற்றியது என்றும் சிங் கூறினார். அவரது கருத்துப்படி, நிம்மதியடைந்த குடும்பத்தினர் பின்னர் மீண்டும் ஏறி நாயுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஏப்ரல் 1-ம் தேதி எக்ஸ் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ, இப்போது, ​​3.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: