Tamil Nadu Groom : கடலூரில் நடைப்பெற்ற திருமணத்தில், மணமக்களின் நண்பர்கள் ஊரே வியந்து பேசும் அளவிற்கு சுவாரசியமான கல்யாண பரிசு ஒன்றை அளித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே செல்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி விலை ஏறிக் கொண்டே செல்வதால் பொது மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்த கவலை ஹனிமூன் செல்லும் புதுமண தம்பதிகளுக்கு வந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர்களின் நண்பர்கள் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு திருமண பரிசு ஒன்றை அளித்துள்ளனர்.
Tamil Nadu Groom: இப்படி ஒரு பரிசா?
கடலூரில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில் புது மணத் தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை நண்பர்கள் பரிசாக அளித்துள்ளனர். தம்பதிகளுக்கு ஒவ்வொருவராக பரிசு கொடுக்க மேடை ஏறிக் கொண்டிருந்த நேரத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் மேடைக்கு வந்து, 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பிய கேன் ஒன்றை பரிசாக தந்துள்ளனர்.

இதை தம்பதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தின் 39 நொடி வீடியோ தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இதனால், இந்த சம்பவம் மாநில அளவில் வைரலானது.
இது குறித்து பரிசு கொடுத்த நண்பர்கள், ‘தமிழகத்தில் பெட்ரோலின் விலை 85 ரூபாயைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது நாட்டிலேயே அதிகமான விலைகளில் ஒன்று. எனவே தான், எரிபொருளை பரிசாக தரலாம் என்று முடிவு செய்தோம்’ என்று நகைப்புடன் தெரிவித்தனர்.
ஒரே நாளில் மணமக்கள் இந்தியா முழுவதும் வைரலாகி விட்டனர்.