ஒருவர் வண்டிக்கு பெட்ரோல் அடிச்ச பிறகு, ரூ. 2000 கொடுக்க அதை வாங்க மறுத்த பெட்ரோல் பம்ப் ஊழியர் ஸ்கூட்டரில் இருந்து திரும்ப பெட்ரோல் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக மே 19 தேதி அறிவித்தது முதல், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டை நோட்டைச் செலவழிக்கவோ அல்லது மாற்றவோ விரும்புகிறார்கள்.
இப்போது உத்தரபிரதேசத்தின் ஜலானில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதே நேரத்தில் வேடிக்கையாகவும் உள்ளது. இந்த சம்வத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ஒருவர் பெட்ரோல் பங்க்குக்கு சென்று தனது ஸ்கூட்டரில் பெட்ரோலை நிரப்பிய பின்னர், அந்த நபர் ரூ.2,000 நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், ஒரு பெட்ரோல் பம்ப் ஊழியர் ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்துள்ளார். மேலும், அந்த நபரிடம் வேறு பணம் இல்லாததால் அவருடைய ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோலை திரும்ப எடுத்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி, செப்டம்பர் 30 வரை வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் .ஒரே நேரத்தில் ரூ.20,000 அளவுக்கு மட்டுமே மாற்றப்படும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதுவரை பரிவர்த்தனைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளைப் நோட்டுகளைப் பயன்படுத்தலாம். எனவே, 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பது சட்ட விரோதம் ஆகும்.
நிகர் பர்வீன் (@NigarNawab) என்ற ட்விட்டர் பயனாளர் ஆன்லைனில் பகிர்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து ஜலான் போலீஸ் (@jalaunpolice) ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த சம்பவத்தை அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்-இன்சார்ஜ் காவல் நிலைய கோட்வாலி ஓராய் உத்தரவிட்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சிலர் அவர்களின் நிலைமைக்கு அனுதாபம் தெரிவித்தனர்.
India.com உடன் பேசிய அண்த பெட்ரோல் பம்ப் மேலாளர் ராஜீவ் கிர்ஹோத்ரா, ரிசர்வ் வங்கியின் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, பெட்ரோல் பம்ப்களுக்கு அதிக அளவில் ரூ.2,000 நோட்டுகள் வருவதால் பரிவர்த்தனைகள் கடினமாகிவிட்டதாகக் கூறினார். வாடிக்கையாளர் அதே விலைக்கு பெட்ரோல் வாங்கினால் ரூ.2000 நோட்டுகளை ஏற்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், பலர் சிறிய அளவில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு ரூ.2,000 நோட்டை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“